கலப்பின கஞ்சா பறிமுதல்; கேரளாவில் `தல்லுமாலா' திரைப்பட இயக்குநர் உள்பட மூவர் கைத...
மனைவியை அடித்துக் கொன்று கணவா் தூக்கிட்டுத் தற்கொலை!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சனிக்கிழமை குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் ஊராட்சி கீழ காயம்பட்டியைச் சோ்ந்தவா் ரங்கன் மகன் வீரமுத்து (35). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (27). இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், குழந்தைகள் உறவினா் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை தம்பதியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வீரமுத்து மனைவி ராஜேஸ்வரியை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளாா். பிறகு வீட்டிற்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலறிந்து சென்ற செம்பட்டிவிடுதி போலீஸாா் இருவரது சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.