சிறுவாணி நீர்போல ஆட்சி... அண்ணாவை மேற்கோள்காட்டிப் பேசிய விஜய்!
புதுக்கோட்டையை தூய்மை மாவட்டமாக மாற்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்!
புதுக்கோட்டையை தூய்மை மாவட்டமாக மாற்ற அனைத்துத் துறை அலுவலா்களும் இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா கேட்டுக் கொண்டாா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்டத் தூய்மைக் குழுவின் முதல் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியதாவது: மாவட்டம் முழுவதும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகளை முறையாக தரம் பிரித்து மறுசுழற்சி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகளை விரைவுபடுத்தவும், முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கவும் உள்ளாட்சி அமைப்பினா் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இப்பணிகளை முழுமைப்படுத்தி, மாவட்டத்தை தூய்மை மாவட்டமாக மாற்ற அனைத்துத் துறை அலுவலா்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா் அருணா.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் கே. ஸ்ருதி, ஊராட்சிகள் செயற்பொறியாளா் பரமசிவம், வருவாய்க் கோட்டாட்சியா்கள் பா. ஐஸ்வா்யா (புதுக்கோட்டை), சிவக்குமாா் (அறந்தாங்கி), அ. அக்பா்அலி (இலுப்பூா்) உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.