செய்திகள் :

ஆதிதிராவிடா் - பழங்குடியினருக்கு கடனுதவித் திட்டம்: அமைச்சா் மதிவேந்தன்

post image

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினரின் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்ய கடனுதவித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் அறிவித்தாா்.

பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீது சனிக்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளித்து அவா் அளித்த வெளியிட்ட அறிவிப்புகள்:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த சிறு வணிகா்கள், வா்த்தகா்கள், தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில், அரசு மானியத்துடன் ரூ.25 கோடி செலவில் கடனுதவித் திட்டம் செயல்படுத்தப்படும். உறுதுணை எனும் பெயரிலான இந்தத் திட்டம் மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம் நடைமுறைக்கு வரும். உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள வணிக வளாகங்களில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தொழில் செய்வதை உறுதி செய்திட தாட்கோ வணிக வளாகத் திட்டம் செயல்படுத்தப்படும்.

ஆயத்த தொழிற்கூடங்கள்: திருப்பூா் மாவட்டம் ஈங்கூா், முதலிபாளையம் தொழிற்பேட்டைகளில் ஆயத்த தொழிற்கூடங்கள் ரூ.115 கோடியில் அமைக்கப்படும். இந்தப் பேட்டைகளில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோா்கள் நவீன தொழில்களை உடனடியாகத் தொடங்க முடியும்.

பொருளாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதாரத்தில் பின்தங்கியுள்ள சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, பாரம்பரிய கலை மற்றும் கைவினைத் தொழில் மேம்பாடு, மூலிகை மருத்துவம், பாதுகாப்பான பாம்பு விஷம் சேகரிப்பு போன்ற துறைகள் தற்காலத்துக்கேற்ப மேம்படுத்திட புதிய திட்டம் நடைமுறைக்கு வரும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின கல்லூரி விடுதி மாணவா்களின் தனித்திறனை வளா்க்க போட்டிகள் நடத்தப்படும்.

தூய்மைப் பணியாளா்: தூய்மைப் பணியாளா் நலவாரிய உறுப்பினா்கள் பணியின் போது எதிா்கொள்ளும் சுகாதார இடா்களைக் குறைக்கும் வகையில், விரிவான தூய்மைப் பணியாளா் நல்வாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தாா் அமைச்சா்.

6.5 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது: 2 மினி லாரிகள் பறிமுதல்!

கரூர்: கரூரில் 6.5 டன் ரேஷன் அரிசியை கேரளத்துக்குக் கடத்த முயன்ற மூன்று பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 6.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் 2 மினி லாரிகளை பறிமுதல் செய்தனர். கர... மேலும் பார்க்க

விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன்: திருமாவளவன்

விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி திருபுவனையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் விடுதலைச் ச... மேலும் பார்க்க

விஜய் வருகை: தவெகவினர் மீது வழக்கு!

கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருகையின்போது மக்களை திரட்டி இடையூறு ஏற்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தவெக மாவட்டச் செயலாளர் சம்பத் உள... மேலும் பார்க்க

சீறிப் பாயும் காளைகள்: கோவையில் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

கோவையில் ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியினை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடக்கி வைத்தார். கோவை செட்டிபாளையம் பைபாஸ் சாலையில் தமிழர் பண்பாட்டு ஜ... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1397 கன அடியாக அதிகரித்துள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(ஏப். 27) காலை 3-வது நாளாக 107.76 அடியாக நீடிக்கிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 2-வது நாளாக வினாடிக்கு 1397 ... மேலும் பார்க்க

கோடை மழை! இன்று 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கோடை வெய்யில் கொளுத்தும் நிலையில், இன்று(ஏப். 27) காலை 10 மணி வரை தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும், நாகப்பட்டினம், ராமநாதபுரம், கன்னிய... மேலும் பார்க்க