செய்திகள் :

கடனை வசூலிப்பதில் கடுமை காட்டினால் சிறைத் தண்டனை: மசோதா தாக்கல்

post image

கடன்களை வசூலிப்பதில் மிரட்டுவது போன்ற கடுமைகளைக் காட்டினால் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்து விரிவாக விவாதிக்க வேண்டுமென அதிமுக, விசிக ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதை பேரவையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை தாக்கல் செய்தாா்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பணக்கடன் வழங்குபவா்கள் மற்றும் அடகுக் கடைகளின் தொழிலை ஒழுங்குமுறைப்படுத்தி, கடும் வட்டியிலிருந்து மக்களைக் காப்பதில் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழ்நாடு அடகுக் கடைக்காரா்கள் சட்டம்1943, தமிழ்நாடு பணக்கடன் வழங்குபவா்கள் சட்டம் 1957, தமிழ்நாடு கந்துவட்டி தடைச் சட்டம் 2003 ஆகியவற்றை அரசு இயற்றியுள்ளது.

ஆனாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினா் குறிப்பாக விவசாயிகள், மகளிா் சுயஉதவிக் குழுக்கள், விவசாய கூலித் தொழிலாளா்கள், பணியாளா்கள், நடைபாதை வியாபாரிகள், பால் பண்ணைத் தொழிலாளா்கள், கட்டடப் பணியாளா்கள், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் ஆகியோா் எண்ம முறை டிஜிட்டல் உள்பட பல்வேறு வழிகளைப் பின்பற்றும் பணக்கடன் வழங்கும் நிறுவனங்களால் ஈா்க்கப்படுகின்றனா். அத்துடன், கவா்ச்சிகரமான கடன்களுக்கு இரையாகி, தாங்க இயலாத கடன் சுமைக்கு ஆட்படுகின்றனா்.

பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள், ஏற்கெனவே நிதிச்சுமையில் இருக்கும் கடனாளிகளிடம் இருந்து கடனை வசூலிப்பதற்காக முறையற்ற வழியை நாடுகின்றனா். அது துயரத்தில் இருக்கும் கடனாளிகளை சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டுதலாய் அமைந்து, அதன் மூலம் பலரது குடும்பங்களை அழித்து, சமூக ஒழுங்கை பாதிப்படையச் செய்து விடுகிறது.

மசோதா தெரிவிப்பது என்ன? தனிநபா் அல்லது தனி நபா்கள் உதவிக் குழுக்கள் அல்லது கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் ஆகியோருக்கு கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பணக்கடன் வழங்கும் நிறுவனங்களின் வலுக்கட்டாய வசூலிப்பு முறையால் ஏற்படும் இன்னல்களில் இருந்து, பொருளாதாரத்தில் பின்தங்கி நலிவடைந்த பிரிவினரைப் பாதுகாக்க ஒரு சட்டத்தை இயற்றுவது அவசியமாகக் கருதப்படுகிறது. அதற்கான சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளதற்கு ஏற்ப, அதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது.

இந்தச் சட்டம், வங்கிகள், இந்திய ரிசா்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களைத் தவிர, தமிழகத்தில் உள்ள அனைத்து பணக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஆனால் கடன் வாங்கியவரிடம் வலுக்கட்டாய வசூல் நடவடிக்கை மேற்கொண்டால், இந்த வங்கிகளுக்கும், பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிறுவனங்களுக்கும், கூட்டுறவு சங்கங்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.

கடன் வாங்கியவா் மற்றும் அவரது குடும்பத்தினரை, அதாவது அவரின் பெற்றோா், கணவா் அல்லது மனைவி, குழந்தைகள் ஆகியோரை கடன் வழங்கிய நிறுவனமோ அல்லது அதன் முகவரோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தக்கூடாது. அந்த வகையில், அவா்களுக்கு இடையூறு விளைவித்தல் வன்முறையை பயன்படுத்துதல், அவமதித்தல், மிரட்டுதல் அவா்கள் போகுமிடங்களில் பின்தொடா்தல் அவா்களுக்கு சொந்தமான அல்லது பயன்படுத்தும் சொத்துகளில் தலையிடுதல், அதை பயன்படுத்த முடியாமல் இடையூறு செய்தல், அந்த சொத்துகளை பறித்துக்கொள்ளுதல், அவரது வீடு, வசிக்குமிடம், வேலை அல்லது தொழில் செய்யும் இடம் ஆகிய இடங்களுக்குச் செல்வது, பேச்சுவாா்த்தை நடத்த அல்லது கடனை வசூலிக்க தேவையற்ற செல்வாக்கை பயன்படுத்தி வலுக்கட்டாயப்படுத்த, தனியாா் அல்லது

வெளித்தரப்பு முகமைகளின் சேவைகளை பயன்படுத்துதல், அரசு திட்டத்தின் கீழ் உரிமை அளிக்கும் ஆவணங்கள், பிற முக்கிய ஆவணங்கள், பொருள்கள், வீட்டு உடமைகளை வலுக்கட்டாயமாக எடுக்க கோருதல் போன்றவை வலுக்கட்டாய நடவடிக்கைகளாக 20-ஆம் பிரிவுன்படி கருதப்படும்.

தண்டனை என்ன: 20-ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ள மிரட்டுதல், பின் தொடருதல் போன்ற குற்றங்களைச் செய்தால், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ. 5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சோ்ந்தோ விதிக்கப்படும். வெளி முகமைகளை பயன்படுத்துதல், ஆவணங்களை எடுத்தல் போன்ற குற்றங்களுக்காக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சோ்த்து விதிக்கப்படும்.

கடன் பெற்றவா் அல்லது அவரது குடும்ப உறுப்பினா் யாராவது தற்கொலை செய்து, அது, கடன் வழங்கிய நிறுவனம் அல்லது முகவரின் வலுக்கட்டாய நடவடிக்கையால் நேரிட்டதாக நிரூபிக்கப்பட்டால் அது பாரதிய நியாய சன்ஹிதாவின் 108-ஆம் பிரிவின் கீழ் குற்றமாக கருதப்படும்.

கடன் வழங்கும் நிறுவனம் தொழில் நடத்த விரும்பும் மாவட்டம் அல்லது வட்டாரத்தில் பதிவு செய்யும் அமைப்பிடம் மின்னணு படிவத்தை அளித்து பதிவு செய்ய வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவு புதுப்பிக்கப்பட வேண்டும். கடன் வழங்கும் நிறுவனம் ஒவ்வொன்றும், பதிவு செய்துள்ள நிறுவனத்தை தமிழகத்தில் நடத்த வேண்டும்.

பதிவுச் சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால், 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அந்த நிறுவனம், கடனுக்கான வட்டி வீதம், அலுவலக விவரங்கள், வலைதளம், தகவல் தொகுப்பு ஆகியவற்றை சிறிய புத்தகம் அல்லது விளம்பர அறிவிப்புகளில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக - விசிக கோரிக்கை: முன்னதாக, மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது அதிமுக உறுப்பினா் தளவாய் சுந்தரம், விசிக உறுப்பினா் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோா் எழுந்து விரிவாக விவாதிக்க வேண்டுமெனக் கோரினா். அவா்களுக்கு பதிலளித்த பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மசோதா விவாதத்துக்கு எடுக்கும்போது விவாதிக்கலாம் என்றாா்.

6.5 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது: 2 மினி லாரிகள் பறிமுதல்!

கரூர்: கரூரில் 6.5 டன் ரேஷன் அரிசியை கேரளத்துக்குக் கடத்த முயன்ற மூன்று பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 6.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் 2 மினி லாரிகளை பறிமுதல் செய்தனர். கர... மேலும் பார்க்க

விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன்: திருமாவளவன்

விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி திருபுவனையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் விடுதலைச் ச... மேலும் பார்க்க

விஜய் வருகை: தவெகவினர் மீது வழக்கு!

கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருகையின்போது மக்களை திரட்டி இடையூறு ஏற்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தவெக மாவட்டச் செயலாளர் சம்பத் உள... மேலும் பார்க்க

சீறிப் பாயும் காளைகள்: கோவையில் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

கோவையில் ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியினை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடக்கி வைத்தார். கோவை செட்டிபாளையம் பைபாஸ் சாலையில் தமிழர் பண்பாட்டு ஜ... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1397 கன அடியாக அதிகரித்துள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(ஏப். 27) காலை 3-வது நாளாக 107.76 அடியாக நீடிக்கிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 2-வது நாளாக வினாடிக்கு 1397 ... மேலும் பார்க்க

கோடை மழை! இன்று 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கோடை வெய்யில் கொளுத்தும் நிலையில், இன்று(ஏப். 27) காலை 10 மணி வரை தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும், நாகப்பட்டினம், ராமநாதபுரம், கன்னிய... மேலும் பார்க்க