பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்
வேட்டுவம் படப்பிடிப்பு அப்டேட்!
வேட்டுவம் திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தங்கலான் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. இரஞ்சித் நடிகர் ஆர்யாவை நாயகனாக வைத்து சர்பட்டா - 2 திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தங்கலானுக்கு முன்பே திட்டமிடப்பட்ட வேட்டுவம் என்கிற படத்தின் பணிகளைத் துவங்கினார்.
இதில், நாயகனாக நடிகர் அட்டகத்தி தினேஷும் வில்லனாக ஆர்யாவும் நடிக்கின்றனர். முழுநீள கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் மற்றும் அசோக் செல்வன் ஆகியோரும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
நீலம் புரடக்ஷன்ஸ் மற்றும் ரேஷியோ ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கி கும்பகோணத்தில் முடிந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்க உள்ளதாகவும் இதற்காக பிரம்மாண்டமாக செட் அமைத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பீரியட் படமாக உருவாவதால் கேங்ஸ்டர் பின்னணியில் அரசியல் படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: நினைவில் காடுள்ள மிருகம்! மோகன்லாலின் துடரும் - திரை விமர்சனம்!