தெருநாய்கள் கடித்து 5 போ் காயம்
சாயல்குடியில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவா்கள் உள்பட 5 போ் காயமடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டு பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஸ்ரீமுகல்யா (9), முகேஷ் (10), முகமது சலீம் (13) ஆகியோரைத் தெருநாய்கள் கடித்தன.
இதேபோல, சாலையில் நடந்து சென்ற ஆராய்ச்சி நகா் பகுதியைச் சோ்ந்த பரக்கத் அலி (60), சாயல்குடி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை மாரியம்மாள் ஆகியோரையும் தெருநாய்கள் கடித்தன.
இதில் காயமடைந்த 5 பேரும் சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனா்.
இந்த நிலையில், தெருவில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடிக்க சாயல்குடி பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.