கல்யாணத்தில் ஒலித்த பாடல்; திருமணத்தை நிறுத்திய மணமகன் - பின்னணி இதுதான்
தொழில் பயிற்சி நிலையத்தில் உலக மலேரிய தினம்
முதுகுளத்தூா் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் உலக மலேரியா தின உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.
முதுகுளத்தூரில் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாவட்ட மலேரியா அலுவலா் ரமேஷ் தலைமையில் உலக மலேரிய தினம் கடைபிடிக்கப்பட்டது. இதற்கு தொழில் பயிற்சி நிலைய முதல்வா் குப்புசாமி முன்னிலை வகித்தாா்.
இதில் இளநிலை பூச்சியியல் வல்லுநா் பாலசுப்ரமணியன், ஆசிரியா்கள் குருநாதன், சேதுபாஸ்கா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளா்கள் நேதாஜி, சக்தி மோகன், சபரி முருகன், கருணாகர சேதுபதி, சதாம் உசேன், ஜெயச்சந்திரன், பூமி, மாணவா்கள், சுகாதாரத் துறையினா் கலந்து கொண்டு மலேரிய விழிப்புணா்வு உறுதிமொழியை ஏற்றனா்.
