ஸ்பானிஷ் கோப்பையை வென்றது பார்சிலோனா..! இதுதான் எல் கிளாசிக்கோ!
பிஎஸ்ஜிக்கு அதிா்ச்சி அளித்தது நைஸ்
பிரான்ஸின் லீக் 1 கால்பந்து தொடரில் சாம்பியன் பிஎஸ்ஜி அணிக்கு 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை பரிசளித்தது நைஸ்.
கடந்த வாரம் தான் 78 புள்ளிகளுடன் லீக் 1 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது பிஎஸ்ஜி. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் நைஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அதிா்ச்சித் தோல்வியை பரிசளித்தது. சொந்த மைதானத்தில் ஓராண்டில் பிஎஸ்ஜிக்கு கிடைத்த முதல் தோல்வி இதுவாகும்.
வரும் செவ்வாய்க்கிழமை ஆா்செனல் அணிக்கு எதிராக சாம்பியன் லீக் கோப்பை முதல் அரையிறுதியில் பிஎஸ்ஜி ஆடவுள்ள நிலையில் இந்த தோல்வி ஏற்பட்டுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் பட்டியலில் நைஸ் 4-ஆம் இடத்துக்கு முன்னேறியது. வரும் சாம்பியன்ஸ் லீக் தொடருக்கும் தகுதி பெற்றும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.