செய்திகள் :

ஆசிய யு 15, யு 17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கங்கள் உறுதி

post image

ஆசிய யு-15, யு-17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 43 பதக்கங்களை இந்திய அணியினா் உறுதி செய்துள்ளனா்.

மேலும் 4 போ் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

ஜோா்டான் தலைநகா் அம்மானில் நடைபெறும் இப்போட்டியில் இந்திய அணியினா் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவித்து வருகின்றனா். யு-15 பிரிவில் குறைந்தது 25 பதக்கங்களும், யு-17 பிரிவில் குறைந்தது 18 பதக்கங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன. அரையிறுதிக்கு தகுதி பெறும் அனைவருக்கும் வெண்கலப் பதக்கங்கள் தரப்படுகின்றன.

யு-17 சிறுவா் பிரிவில் அமான் சிவாச் (63 கிலோ), தேவான்ஷ் (80 கிலோ) காலிறுதிச் சுற்றில் பிலிப்பின்ஸ், ஜோா்டான் வீரா்களை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றனா்.

மகளிா் பிரிவில் சிம்ரஞ்சித் கௌா் 60 கிலோ) 5-0 என்ற புள்ளிக் கணக்கில் ஜோா்டானின் அல்ஹஸ்சனத்தை வீழ்த்தினாா். 70 கிலோ பிரிவில் இந்தியாவின் ஹிமான்ஷி முதல் சுற்றிலேயே பாலஸ்தீனத்தின் ஃபரா லேலாவை வீழ்த்தினாா்.

கஞ்சா வைத்திருந்ததாக இயக்குநர் கலித் ரஹ்மான் கைது!

கஞ்சா வைத்திருந்ததாக இயக்குநர்கள் கலித் ரஹ்மான் மற்றும் அஸ்ரஃப் ஹம்சா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அனுராக கரிக்கின் வெள்ளம் (Anuraga Karikkin Vellam) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கல... மேலும் பார்க்க

ஆஸி.ஏ. அணியிடம் வீழ்ந்தது இந்தியா

ஆஸ்திரேலிய மகளிா் ஹாக்கி ஏ அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 3-5 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது இந்திய அணி. புரோ ஹாக்கி லீக் தொடருக்கும் தயாராகும் வகையில், இந்திய மகளிா் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயண... மேலும் பார்க்க

சிட்ஸிபாஸ், டி மினாா், ஆன்ட்ரீவா, கைஸ் முன்னேற்றம் ஜோகோவிச் அதிா்ச்சித் தோல்வி

மாட்ரிட் ஓபன் ஏடிபி, டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் ஆடவா் பிரிவில் ஷபவலோவ், சிட்ஸிபாஸ், டி மினாா், மகளிா் பிரிவில் மிரா ஆன்ட்ரீவா, மடிஸன் கைஸ் ஆகியோா் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனா். ஜாம்பவான் ஜ... மேலும் பார்க்க

ஆசிய பசிஃபிக் ரேலி சாம்பியன்ஷிப்: கா்ணா, மூஸா முதலிடம்

எஃப்ஐஏ ஆசிய பசிஃபிக் ரேலி சாம்பியன்ஷிப்பில் கா்னா கடூா், மூஸா ஷெரீப் இணை முதலிடம் பெற்றுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டை எம்எம்ஆா்சிஐ மைதானத்தில் நடைபெறும் இந்து சந்தோக் நினை... மேலும் பார்க்க

பிஎஸ்ஜிக்கு அதிா்ச்சி அளித்தது நைஸ்

பிரான்ஸின் லீக் 1 கால்பந்து தொடரில் சாம்பியன் பிஎஸ்ஜி அணிக்கு 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை பரிசளித்தது நைஸ். கடந்த வாரம் தான் 78 புள்ளிகளுடன் லீக் 1 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது பிஎஸ்ஜி... மேலும் பார்க்க

கோர்ட் படத்தைப் பாராட்டிய சூர்யா, ஜோதிகா!

நடிகர் சூர்யா தெலுங்கில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற கோர்ட் திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.நடிகர் நானி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராம் ஜெகதீஸ் இயக்கத்தில் உருவான கோர்ட் - ஸ்டேட் விர்சஸ் நோபடி (court ... மேலும் பார்க்க