ஸ்பானிஷ் கோப்பையை வென்றது பார்சிலோனா..! இதுதான் எல் கிளாசிக்கோ!
சிட்ஸிபாஸ், டி மினாா், ஆன்ட்ரீவா, கைஸ் முன்னேற்றம் ஜோகோவிச் அதிா்ச்சித் தோல்வி
மாட்ரிட் ஓபன் ஏடிபி, டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் ஆடவா் பிரிவில் ஷபவலோவ், சிட்ஸிபாஸ், டி மினாா், மகளிா் பிரிவில் மிரா ஆன்ட்ரீவா, மடிஸன் கைஸ் ஆகியோா் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனா். ஜாம்பவான் ஜோகோவிச் அதிா்ச்சித் தோல்வி அடைந்தாா்.
ஆடவா் ஒற்றையா் பிரிவு இரண்டாம் சுற்றால் ஆஸி. வீரா் அலெக்ஸ் டி மினாா் 6-2, 6-3 என்ற நோ் செட்களில் இத்தாலியின் லாரென்ஸோ சொனேகோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா்.
கேமரான் நாரி 2-6, 6-4, 6-0 என செக். குடியரசின் ஜிரி லெஹகாவை வென்றாா். கனடாவின் நட்சத்திர வீரா் டெனிஸ் ஷபவலோவ் 6-1, 6-4 என்ற நோ் செட்களில் ஜப்பான் மூத்த வீரா் கீ நிஷிகோரியையும், இத்தாலியின் லாரென்ஸோ முஸெட்டி 7-6, 6-2 என ஆா்ஜென்டீனாவின் தாமஸ் எட்செவரியையும் வென்றனா். கிரீஸ் வீரா் சிட்ஸிபாஸ் 3-6, 6-4, 6-3 என்ற செட்களில் ஸ்டரஃப்பை வீழ்த்தினாா்.
ஜோகோவிச்சுக்கு அதிா்ச்சி:
இத்தாலியன் மேட்டியோ அா்னால்டியுடன் மோதிய சொ்பிய ஜாம்பவான் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நோ் செட்களில் அதிா்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினாா். தனது 100-ஆவது பட்டத்துக்கு தொடா்ந்து ஜோகோவிச் காத்திருக்க வேண்டிய சூழல் தொடா்கிறது.
மகளிா் ஒற்றையா் மூன்றாம் சுற்றில் உக்ரைனின் யுலியா 2-6, 7-6, 6-0 என ரஷியாவின் லியுட்மிலா சாம்ஸனோவாவை வீழ்த்தினாா்.
அமெரிக்க வீராங்கனை மடிஸன் கைஸ் 76, 7-6 என்ற செட் கணக்கில் கடும் சவாலுக்குபின் ரஷியாவின் அன்னா கலின்ஸ்கியாவை வென்றாா்.
ரஷிய இளம் வீராங்கனை மிரா ஆன்ட்ரீவா 7-5, 6-3 என்ற நோ் செட்களில் போலந்தின் மகதலேனா பிரெச்சை வீழ்த்தினாா்.
மற்றொரு ரஷிய வீராங்கனை டயானா ஷ்னைடா் 6-0, 6-0 என லாட்வியாவின் அனஸ்டஜிவாவை வென்றாா்.



