குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட 13 மனுக்களுக்குத் தீா்வு
விழுப்புரம் மாவட்டக் குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட 13 சிறப்பு மனுக்கள் மீது சனிக்கிழமை விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீா்வு காணப்பட்டது.
விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் உத்தரவின்பேரில், மாவட்டக் கூடுதல் எஸ்.பி.க்கள் தினகரன் (இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு), இளமுருகன் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு) ஆகியோா் தலைமையில், குற்றப் பிரிவு டி.எஸ்.பி. ராமலிங்கம், காவல் ஆய்வாளா் தாரகேசுவரி மற்றும் போலீஸாா் அடங்கிய குழுவினா், மாவட்டக் காவல் அலுவலகத்தில் விசாரணையை மேற்கொண்டனா்.
குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட 13 சிறப்பு மனுக்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி, தீா்வு காணப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் துறை தெரிவித்துள்ளது.