6.5 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது: 2 மினி லாரிகள் பறிமுதல்!
பாமக சித்திரை முழுநிலவு மாநாடு பாடல் வெளியீடு
மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டு பாடலை பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் சனிக்கிழமை வெளியிட்டாா்.
தமிழ்நாட்டில் உள்ள பின் தங்கிய சமுதாயங்கள் முன்னேறும் வகையில் அனைத்து மக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை சமமாக வழங்கக் கோரியும், ஜாதி வாரி கணக்கெடுப்பு கோரியும் சித்திரை முழுநிலவு மாநாடு வரும் மே 11-இல் நடைபெற உள்ளது.
தற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மாநாட்டு பாடலை பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டாா்.
இது எந்த ஒரு சமூகத்திற்கும் எதிரான மாநாடு கிடையாது என்றும், பின்தங்கிய நிலையில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் உரிமையை பெற்றுக் கொடுப்பதற்காக நடத்தப்படுவதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
வன்னியா் சங்கம் சாா்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டிற்கு திருமாவளவன் சீமான் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவா்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.