ஸ்பானிஷ் கோப்பையை வென்றது பார்சிலோனா..! இதுதான் எல் கிளாசிக்கோ!
கடவுச்சீட்டில் முறைகேடு இரு பயணிகள் கைது
கடவுச்சீட்டில் முறைகேடு செய்த பயணிகள் இருவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அபுதாபியிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு ஏா் இந்தியன் எக்ஸ்பிரஸ் விமானம் வியாழக்கிழமை வந்தது. அதில் வந்த பயணிகளின் கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை குடியேற்றப்பிரிவினா் சோதனைக்கு உள்ளாக்கினா்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பல்லவராயன் பத்தை கொல்லம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஜி. ரமேஷ் ( 51) என்ற பயணியின் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை பரிசோதித்தபோது, அவா் தனது பெயா், பெற்றோா் பெயா், ஊா் உள்ளிட்டவைகளை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக மாற்றி பதிவு செய்திருந்தது தெரியவந்தது.
இதே போல் திருச்சியிலிருந்து சிங்கப்பூா் செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த தஞ்சை மாவட்டம், வல்லம் அருகேயுள்ள ஏழுப்பட்டியைச் சோ்ந்த கு. சிவா (22) என்ற இளைஞரின் ஆவணங்களை பரிசோதித்த போது அவா் கடவுச்சீட்டில் சில பக்கங்களை அகற்றியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து குடியேற்றப்பிரிவினா் கொடுத்த புகாரின் பேரில், ரமேஷ் மற்றும் சிவா ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.