செய்திகள் :

Vikatan Nambikkai Awards : `என் வாழ்வின் நம்பிக்கை மனிதர்கள்; தனுஷ் பட அப்டேட்' - மாரி செல்வராஜ்

post image

ஆண்டுதோறும் நம்பிக்கை விதைக்கும் ஆளுமைகளைக் கொண்டாடும் நம் விகடனின் 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் `நம்பிக்கை விருதுகள்' விழா, இன்று (ஏப்ரல் 26) மாலை சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது.

இதில், அன்றாட வாழ்வுரிமைக்காக அலுவலகங்களுக்கு அலைவது தொடங்கி, கொத்தடிமைகளாக இருந்து வதைபடும் அப்பாவிகளை மீட்பது வரை அயராது பழங்குடி மக்களுக்காகப் பணியாற்றிவரும் 'தனராஜ்-லீலாவதி' இணையருக்கு 'பூர்வகுடிகளின் நேசர்கள்' என டாப் 10 மனிதர்கள் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை வழங்கினார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

`உங்கள் வாழ்க்கையின் நம்பிக்கை மனிதர் யார்?’

`இயக்குநர் ராம்.’

`உங்கள் வாழ்க்கையின் நம்பிக்கை இளைஞர் யார்?’

`என் மகன். என் குழந்தைகளை எப்படி வளர்ந்து, இந்த சமூகத்துக்கான முக்கியமான மனிதர்களாக மாறினால் நான் சரியாக இருந்திருக்கிறேன் என்று மகிழ்ச்சியடைவேன்.’

`உங்கள் வாழ்க்கையின் நம்பிக்கை மனிதர்கள்?’

`எனக்கு நம்பிக்கை விதைத்த மனிதர்களை என் வாழ்வில் தினமும் பார்த்திருக்கிறேன். அவர்களின் பெயர்கள் தெரியாது. அவர்கள் அன்பை, நம்பிக்கையை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். நான் செயல்பட உந்து சக்தியாக இருக்கிறார்கள். அவர்கள்தான் எனக்கான நம்பிக்கை மனிதர்கள்.’

`உங்கள் வாழ்க்கையின் நம்பிக்கை இளைஞர்கள்?’

`சில இளைஞர்கள் சமூக மாற்றத்துக்காக உரையாட ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த இளைஞர்கள்தான் எனக்கான நம்பிக்கை இளைஞர்கள்.’

'பைசன்', தனுஷ் பட அப்டேட்..?

`` `பைசன்’ முடிந்துவிட்டது. நானும் தனுஷ் சாரும் இணைந்து அடுத்து படம் பண்றோம். எளிமையான கதையைப் பெருசா பண்ணப்போறேன். அதற்கான வேலையைத்தான் அடுத்து ஆரம்பிக்கப்போறேன்.”

விகடன் நம்பிக்கை விருது விழாவின் முழுமையான தொகுப்பு கீழே இருக்கும் லிங்க்கில்...!

Vikatan Nambikkai Awards : `சுஜாதா போல சயின்ஸை யூடியூப்பில் செய்பவர் Mr.GK' - இயக்குநர் ரவிக்குமார்

ஆண்டுதோறும் நம்பிக்கை விதைக்கும் ஆளுமைகளை கொண்டாடும் நம் விகடனின் இந்தாண்டிற்கான நம்பிக்கை விருது வழங்கும் விழா, இன்று (ஏப்ரல் 26) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றுது.2024-ஆம் ஆண்டின் டாப் 10 மனிதர்க... மேலும் பார்க்க

Vikatan Nambikkai Awards: `96 பாகம் 2 எழுதி முடிச்சிட்டேன்; PC ஸ்ரீராம் சார் கூட..!' - பிரேம்குமார்

ஆண்டுதோறும் நம்பிக்கை விதைக்கும் ஆளுமைகளைக் கொண்டாடும் நம் விகடனின் 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் `நம்பிக்கை விருதுகள்'விழா, இன்று (ஏப்ரல் 26) மாலை சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது.தமிழ் சினிமாவி... மேலும் பார்க்க

Vikatan Nambikkai Awards : நம்பிக்கையை விதைக்கும் ஆளுமைகளைக் கொண்டாடும் அழகிய தருணங்கள்..! | Album

எதிர்காலத்துக்கான நன்னம்பிக்கை - நான் முதல்வன் திட்டம் Vikatan Nambikkai Awards அன்பின் கலைஞன் ச.பிரேம்குமார் அன்பின் கலைஞன் ச.பிரேம்குமார் கிரிக்கெட் வீராங்கனை கமலினிகிரிக்கெட் வீராங்கனை கமலினிVikata... மேலும் பார்க்க

Vikatan Nambikkai Awards : மகத்தான தமிழர்கள் மகுடம் சூடும் மேடை... விகடன் நம்பிக்கை விருது வழங்கும் விழா! | Live

விகடன் நம்பிக்கை விருதுகள் 2024ஆண்டுதோறும் நம்பிக்கை விதைக்கும் ஆளுமைகளை கொண்டாடும் நம் விகடனின் இந்தாண்டிற்கான நம்பிக்கை விருது வழங்கும் விழா, இன்று மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவிரு... மேலும் பார்க்க

விகடன் நம்பிக்கை விருதுகள் : மகத்தான தமிழர்கள் மகுடம் சூடும் மேடை - ஆளுமைகளை கொண்டாட அனைவரும் வருக!

ஆண்டுதோறும் நம்பிக்கை விதைக்கும் ஆளுமைகளை கொண்டாடும் நம் விகடனின் இந்தாண்டிற்கான நம்பிக்கை விருது வழங்கும் விழா, வருகிற 26.04 25, சனிக்கிழமை மாலை 5 மணி அளவில், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவிருக்கிற... மேலும் பார்க்க

'பெண்ணால் ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த முடியுமா?' - விடை தேடும் நிகழ்ச்சி

மேஜிக் 20 தமிழ் நிறுவனத்தின் சார்பில் மேஜிக் பெண்கள் 2.0 நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது. பெண் ஆளுமைகள் ஒன்றிணையும் இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் 29-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும்.இந்த நிகழ்ச்சியானது... மேலும் பார்க்க