செய்திகள் :

சர்பத் விளம்பரத்தில் மத வெறுப்பு பிரசாரம்; பாபா ராம்தேவ்வின் பதஞ்சலிக்குக் குட்டு வைத்த நீதிமன்றம்

post image

யோகா குரு பாபா ராம்தேவ் அனைத்து வகையான மருத்துகள், வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரித்து பதஞ்சலி என்ற நிறுவனப் பெயரில் விற்பனை செய்து வருகிறார்.

ஆனால் அவரது தயாரிப்புகள் குறித்து தவறாக விளம்பரம் செய்து விற்பனை செய்யப்படுவதாக மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றமும் ராம்தேவ்வை இவ்விவகாரத்தில் கண்டித்துள்ளது.

ராம்தேவ் நிறுவனம் புதிதாக ரோஸ் சர்பத் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. வடமாநிலத்தில் ரூஹ் அஃப்ஸா என்ற சர்பத் பிரபலமாக விற்பனையாகிறது.

இந்த ரூஹ் அஃப்ஸா சர்பத்திற்கு எதிராகப் பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்தில் எந்த வித கம்பெனியின் பெயரையும் சொல்லாமல், "ஒரு கம்பெனி சர்பத் விற்ற பணத்தில் மசூதி, மதரஸா கட்டுகிறது. நீங்கள் அந்த சர்பத்தைக் குடித்தால் மசூதியும், மதரஸாவும் கட்டப்படும். பதஞ்சலியின் ரோஸ் சர்பத்தைக் குடித்தால் குருகுலம், பதஞ்சலி பல்கலைக்கழகம் கட்டப்படும்.

லவ் ஜிஹாத் மற்றும் வாக்களிப்பு ஜிஹாத் போலவே, ஒரு சர்பத் ஜிஹாத்தும் நடக்கிறது" என்று அந்த வீடியோ விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதை எதிர்த்து ரூஹ் அஃப்ஸா நிறுவனம் சார்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் சர்ச்சைக்குரிய இந்த விளம்பரத்தைச் சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று அந்நிறுவனம் கேட்டுக்கொண்டிருந்தது.

ரூஹ் அஃப்ஸா நிறுவனம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல், பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரம் ரூஹ் அஃப்சா தயாரிப்பை இழிவுபடுத்துவதோடு, வகுப்புவாதப் பிரிவினையைத் தூண்டும் வகையில் இருக்கிறது என்று கூறினார்.

டெல்லி உயர் நீதிமன்றத்தில், ராம்தேவ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், "இவ்வழக்கில் ஆஜராகப் பிரதான வழக்கறிஞர் வராததால் வழக்கை ஒத்தி வைக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இருப்பினும், நீதிபதி பன்சால், முக்கிய வழக்கறிஞரை நண்பகலில் ஆஜராகுமாறு கூறினார். அவ்வாறு செய்யாவிட்டால், "மிகவும் வலுவான உத்தரவு" பிறப்பிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

ராம்தேவ்
ராம்தேவ்

பின்னர் ராம்தேவ்வின் வழக்கறிஞர் ராஜீவ் நாயர் நீதிமன்றத்தில் ஆஜராகி, பதஞ்சலி நிறுவனம் ரூஹ் அஃப்ஸா தயாரிப்புக்கு எதிரான விளம்பரங்களைத் திரும்பப் பெறுவதாகக் கூறினார்.

பின்னர், ரூஹ் அஃப்ஸாவைப் பாதிக்கும் வகையில் எந்தவொரு அறிக்கைகள் அல்லது விளம்பரங்கள் அல்லது சமூக ஊடக பதிவுகளை வெளியிட மாட்டேன் என்று ராம்தேவ் உறுதிமொழி அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒரு வாரத்திற்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிமன்றம், இந்த வழக்கை மே 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. அதோடு சர்பத் ஜிஹாத் என்ற கருத்தை நியாயப்படுத்த முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விருதுநகர் சம்பா மிளகாய் வத்தலுக்கு புவிசார் குறியீடு - விவசாயிகள் மகிழ்ச்சி!

புவிசார் குறியீடு (GI) என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படுவதாகும். இதன்மூலம், அந்த பொருள் அந்த பகுதியில் பாரம்பரியமாக தயாரிக்கப்படுவத... மேலும் பார்க்க

'பிசினஸ் தொடங்கப் போறீங்களா?' - இந்த 10 கேள்விகளுக்கு பதில் ப்ளீஸ்!

பிசினஸ் - சட்டென எடுக்கும் ஒரு முடிவு அல்ல. பிசினஸ் தொடங்குவதாக முடிவு எடுத்தால் அதற்காக பக்காவாக நம்மை நாமே தயார் செய்துகொள்ள வேண்டும். அதற்கு உங்களை நீங்களே கேட்டுகொள்ள வேண்டிய 10 கேள்விகளை சொல்கிறா... மேலும் பார்க்க

560 கிலோ தங்கம், ரூ.4000 கோடி அரண்மனை வாழ்க்கை; இருந்தும் செயலி முலம் காய்கறி வியாபாரம் - யார் இவர்?

இந்தியாவில் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டது. ஆனாலும் இன்னும் பெயருக்கு சில இடங்களில் மன்னர்கள், இளவரர்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களுக்கு எந்த அதிகாரம் இல்லை என்... மேலும் பார்க்க

Prince Jewellery: பிரின்ஸ் ஜுவல்லரி வழங்கும் பிரத்யேகமான அக்ஷய திருத்யை அட்வான்ஸ் புக்கிங் ஆஃபர்

நேர்த்தியான வடிவமைப்பு மிக்க ஆபரணங்களுக்காக , தென் இந்திய மக்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களுள் ஒன்றான பிரின்ஸ் ஜுவல்லரி, அக்ஷய திருத்யை திருநாளை பிரத்யேகமான அட்வான்ஸ் புக்கிங் ஆஃபர் உடன் கொண்டாடுகி... மேலும் பார்க்க

ரத்தன் டாடா எழுதிய உயில்; கடன்கள் தள்ளுபடி, பணியாளர்கள், நண்பர்கள்.. யாருக்கு என்ன கிடைக்கும்?

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தனது வீட்டு மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கு கிட்டதட்ட ரூ.3.5 கோடி கொடுக்க வேண்டும் என்று உயில் எழுதியுள்ளார். இந்த உதவியாளர்களில் அவரது பியூன் ... மேலும் பார்க்க

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்குப் புவிசார் குறியீடு; அடுத்து எவற்றுக்கு?

குறிப்பிட்ட ஒரு ஊரில் உள்ள சிறப்பு மிக்க தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்குகிறது. இதன் மூலம் அந்த பொருளும் ஊரும் சிறப்படைகிறது. மேலும், குறிப்பிட்ட அந்த பொருட்களின் ... மேலும் பார்க்க