செய்திகள் :

நாக சைதன்யாவின் 24-ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

post image

நாக சைதன்யா நடிக்கும் 24-ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய விடியோ வெளியாகியுள்ளது.

தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் நாக சைதன்யாவின் புதிய படத்தை கார்த்திக் தண்டு இயக்குகிறார்.

இந்தப் படத்திற்கான திரைக்கதையை சுகுமார் எழுதியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா, சுகுமார் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள்.

கடைசியாக நாக சைதன்யா, சாய் பல்லவியுடன் நடித்த தண்டேல் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அசத்தியது.

நாக சைதன்யாவின் முதல் ரூ.100 கோடி வசூலித்த படமாக தண்டேல் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், புராணக்கதை தொடர்பான புதிய படத்தில் (என்சி24) நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்புக்கு ஆயுத்தமாகும் படக்குழுவின் வேலைகளை விடியோவாக வெளியிட்டுள்ளார்கள்.

தெலுங்குப் படங்களில் தற்போது அதிகமாக வரலாற்றுப் புனைவு படங்களை எடுக்கிறார்கள்.

இது குறித்து நாக சைதன்யா தனது எக்ஸ் பக்கத்தில், “எரிக்கப்பட்ட ரகசியங்கள், காலத்தைக் கடந்த, புராணக் கதை த்ரில்லர் படப்பிடிப்பு தொடங்கியது” எனக் கூறியுள்ளார்.

கோர்ட் படத்தைப் பாராட்டிய சூர்யா, ஜோதிகா!

நடிகர் சூர்யா தெலுங்கில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற கோர்ட் திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.நடிகர் நானி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராம் ஜெகதீஸ் இயக்கத்தில் உருவான கோர்ட் - ஸ்டேட் விர்சஸ் நோபடி (court ... மேலும் பார்க்க

வேட்டுவம் படப்பிடிப்பு அப்டேட்!

வேட்டுவம் திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தங்கலான் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. இரஞ்சித் நடிகர் ஆர்யாவை நாயகனாக வைத்து சர்பட்டா - 2 திரைப்படத்தை இயக்... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு - புகைப்படங்கள்

போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அவரது ம... மேலும் பார்க்க

வீரம் மறுவெளியீட்டு டிரைலர்!

வீரம் திரைப்படத்தின் மறுவெளியீட்டு டிரைலரை வெளியிட்டுள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் கடந்த ஏப்.10 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ... மேலும் பார்க்க

நினைவில் காடுள்ள மிருகம்! மோகன்லாலின் துடரும் - திரை விமர்சனம்!

'சுவாமியே சரணம் அய்யப்பா..' குரலுடன் மோகன்லால் கதாபாத்திரம் அறிமுகமாகிறது. மிக ஜாலியான, சாதாரண கார் ஓட்டுநராக தன் எளிய குடும்பத்துடன் ஊரில் அழகாக வலம் வருகிறார். யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காத, ... மேலும் பார்க்க

ராகு கும்ப ராசிக்கும், கேது சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி!

ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னியா ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் இடம்பெயர்ந்தனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராகு, கேது பெயர்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று... மேலும் பார்க்க