ராகு கும்ப ராசிக்கும், கேது சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி!
ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னியா ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் இடம்பெயர்ந்தனர்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராகு, கேது பெயர்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும், கன்னியா ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு கேதுவும் சரியாக 4.20-க்கு இடம்பெயர்ந்தனர்.
ராகு பெயர்ச்சியையொட்டி, ராகு ஸ்தலமான தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் நாகநாத ஸ்வாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பால் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகமும், ஆராதனையும் செய்யப்பட்டது. இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த ராகு பெயர்ச்சியினால் ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்துகொள்ள வேண்டும் என கூறப்படுகிறது.