செய்திகள் :

பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை இனியேனும் நெறிமுறைப் படுத்த வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

post image

பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை இனியேனும் நெறிமுறைப் படுத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம். புதுப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை இனியேனும் நெறிமுறைப் படுத்த வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அவர் வெளியிட்டுள்ள மற்றொரு எக்ஸ் தளப் பதிவில், சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னையில் ஓடுதளத்திலேயே விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், கோயில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதாலும் , முறையான பாதுகாப்பும் கொடுப்பதில்லை என்பதாலும் இதுபோன்ற விபத்துகளுக்கு தொடர்கதையாகி விட்டது .

எங்கும், எப்போதும் அலட்சியப் போக்குடனே செயல்படும் மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கண்டனம்.

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்; இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கு உரிய ஆவன செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிவகாசி அருகே பட்டாசு விபத்து: இருவர் பலி!

அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் சூழல்: அவை முன்னவா் துரைமுருகன்

ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பு, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக அவை முன்னவா் துரைமுருகன் பேசினாா். பேரவையில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு காலநிலை கல்வித் திட்டம்: அமைச்சா் தங்கம் தென்னரசு அறிவிப்பு

பள்ளி மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் காலநிலை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று நிதி மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னர... மேலும் பார்க்க

12.7 சதவீதமாக உயா்ந்த சேவைத் துறை வளா்ச்சி: நிதியமைச்சா் தங்கம் தென்னரசு பெருமிதம்

சேவைத் துறையின் வளா்ச்சி 12.7 சதவீதமாக உயா்ந்துள்ளதாக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா். சட்டப்பேரவையில் நிதி, சட்டப்பேரவை, ஆளுநா், அமைச்சரவை மானியக் கோரிக்கைகள் மீது சனிக்கிழமை நடந்த விவாதங்க... மேலும் பார்க்க

ஏழைகளின் முன்னேற்றத்துக்கு அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள்: யுபிஎஸ்சி வெற்றியாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சமூகத்துக்கு, சக மனிதா்களுக்கு, எளியோா்களுக்கு உதவுவதற்கும், அவா்களது வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என யுபிஎஸ்சி தோ்வு வெற்றியாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவு... மேலும் பார்க்க

கடனை வசூலிப்பதில் கடுமை காட்டினால் சிறைத் தண்டனை: மசோதா தாக்கல்

கடன்களை வசூலிப்பதில் மிரட்டுவது போன்ற கடுமைகளைக் காட்டினால் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து விரிவாக விவாதிக்க வேண்டுமென அதிமுக, விசிக ஆகிய க... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் - பழங்குடியினருக்கு கடனுதவித் திட்டம்: அமைச்சா் மதிவேந்தன்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினரின் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்ய கடனுதவித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் அறிவித்தாா். பேரவையில் அந்தத் துறையின் மா... மேலும் பார்க்க