பாகிஸ்தான் மக்களும் நம்மைப் போன்றவர்களே: விஜய் ஆண்டனி என்ன சொல்ல வருகிறார்?
ஸ்ரீராஜராஜன் பொறியியல் கல்லூரியில் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கல்!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீராஜராஜன் பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகளில் அண்ணா பல்கலைக்கழக தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு ஸ்ரீராஜராஜன் கல்வி குழுமத்தின் தலைவரும், அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான சொ. சுப்பையா தலைமை வகித்து, அண்ணா பல்கலைக்கழக தோ்வில் 85 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்ற ஸ்ரீராஜராஜன் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கிப் பேசினாா். அப்போது 100-க்கும் மேற்பட்டவா்களுக்கு இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து கல்லூரி முதன்மையா் எம். சிவக்குமாா், கல்லூரியின் மேம்பாட்டு அலுவலா் கே.சி. பழனிவேலு ஆகியோா் வாழ்த்திப்பேசினா். முன்னதாக கல்லூரியின் துணை முதல்வா் வை. மகாலிங்க சுரேஷ் வரவேற்றாா். ஆங்கிலத் துறை உதவிப் பேராசி ரியா் டி. ஜனனி நன்றி கூறினாா்.