நிறைவடைந்தது நீ நான் காதல் தொடர்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நீ நான் காதல் தொடர் நிறைவடைந்துள்ளது.
ஸ்டார் மா தொலைக்காட்சியின் பிரபல தொடரான 'நுவ்வு நேனு பிரேமா' என்ற தொடரின் மறு உருவாக்கமாக 'நீ நான் காதல்' தொடர் எடுக்கப்பட்டு வந்தது.
இத்தொடர் கடந்த 2023 நவ 13 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்த நிலையில், பிரதான பாத்திரத்தில் பிரேம் ஜேக்கப், வர்ஷினி சுரேஷ், சங்கரேஷ் குமார், நவீன் முரளிதரன் உள்ளிட்டோர் நடித்து வந்தனர்.
முழுக்க முழுக்க காதல் கதையாகவும், கணவன் மனைவி உறவை மையமாக வைத்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது.
இந்நிலையில், நீ நான் காதல் தொடர் 384 எபிசோடுகளுடன் நிறைவடைந்துள்ளது.
மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நீ நான் காதல் தொடர் நிறைவடைந்தது, இத்தொடரை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீ நான் காதல் தொடர் நிறைவடைந்த நிலையில், இத்தொடர் ஒளிபரப்பான மாலை6 மணிக்கு ஆஹா கல்யாணம் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.