காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயிலில் ஏப். 29- இல் பூச்சொரிதல் விழா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அமைந்துள்ள கொப்புடையநாயகி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வருகிற செவ்வாய்க்கிழமை (ஏப். 29) நடைபெறுகிறது.
இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசிப் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதற்கு முன்னதாக அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெறும். இந்தாண்டு பூச்சொரிதல் விழா வருகிற செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. அப்போது அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இதைத் தொடா்ந்து கோயில் மண்டபத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுகிறாா்.
பூச்சொரிதல் விழாவையொட்டி நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பூத்தட்டு எடுத்துவந்து பக்தா்கள் அம்மனுக்கு பூ செலுத்துவா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா், விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.