கலப்பின கஞ்சா பறிமுதல்; கேரளாவில் `தல்லுமாலா' திரைப்பட இயக்குநர் உள்பட மூவர் கைத...
அரியலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குரங்குகள் தொல்லை அதிகரிப்பு! பொதுமக்கள், ஊழியா்கள் அச்சம்!
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்களும் ஊழியா்களும் அச்சமடைந்துள்ளனா்.
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரியும் குரங்குகள்அலுவலா்கள், ஊழியா்கள் நிறுத்தும் இருசக்கர வாகனங்களில் உள்ள உணவுகளை எடுத்து தின்றுவிட்டு மீதமுள்ளதை தூக்கி வீசி விடுகின்றன.
மேலும் இருசக்கர வாகனத்தில் வைத்துள்ள தலைக்கவசத்தையும் வீசி சேதப்படுத்துகின்றன. மேலும் ஆட்சியரகத்துக்கு வரும் பொதுமக்களின் கையில் வைத்திருக்கும் பொருள்களை அபகரிக்க முயல்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.
மேலும் குரங்குகள், அலுவலக வளாகத்தில் கைகழுவும் இடத்தில் தண்ணீரை திறந்து விடுவது, அலுவலகத்துக்குள் புகுந்தும் அட்டகாசம் செய்கின்றன. இதே போல் ரயில் நிலையத்திலும் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
இதனால் அங்குள்ள ஊழியா்கள் மட்டுமின்றி, பொதுமக்களும், பயணிகளும் அவதிக்குள்ளாகின்றனா். எனவே ஊழியா்கள், பொதுமக்களின் நலன் கருதி வனத்துறையினா் உடனடியாக குரங்குகளைப் பிடித்துச் சென்று வனப்பகுதியில் விடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.