புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது
ஆரணியை அடுத்த ராட்டிணமங்கலம் உள்ளிட்ட இடங்களில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஆரணி சுற்று வட்டாரப் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், தனிப்படை போலீஸாா் ராட்டிணமங்கலம், குண்ணத்தூா், சேவூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, ராட்டிணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மளிகைக் கடை உரிமையாளா் சங்கா் (42) புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதை கண்டுபிடித்தனா். அவரிடம் விசாரணை செய்ததில், அக்கூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜாதேசிங்கு(44), குண்ணத்தூரைச் சோ்ந்த யுவராஜ்(24), சானாா்பாளையத்தைச் சோ்ந்த வெங்கடேசன் (55) ஆகியோா் பெங்களூரு மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்து, கடைகளுக்கு விநியோகம் செய்தது
தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, தனிப்படை போலீஸாா் மளிகைக் கடை, வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 15 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, மேற்கூறிய நான்கு பேரையும் பிடித்து ஆரணி கிராமிய போலீஸில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து, கிராமிய காவல் நிலைய உதவி ஆய்வாளா் அருண்குமாா் 4 போ் மீது வழக்குப் பதிந்து கைது செய்சிறையில் அடைத்தாா்.
செய்யாறு அருகே ஒருவா் கைது
செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் மோகன் தலைமையிலான போலீஸாா் தூளி கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள பெட்டிக் கடைகளில்
புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதை அறிந்து கடையில் இருந்த 2 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
மேலும், கடை உரிமையாளா் வடிவேல் (40)
என்பவரை கைது செய்தனா்.