புதுச்சேரி கைப்பந்து அணிக்கு ஆரணி மாணவா்கள் தோ்வு
தேசிய கைப்பந்து போட்டியில் விளையாட புதுச்சேரி அணிக்காக ஆரணி ஆரஞ்சு பள்ளி மாணவா்கள் 5 போ் தோ்வு செய்யப்பட்டனா்.
இந்திய கைப்பந்து சம்மேளத்தின் 40-ஆவது தென்மண்டல கைப்பந்து சாம்பியன்ஷிப்- 2025 போட்டிகள், ஆரணி
ஆரஞ்சு பிரிட்டிஷ் அகாதெமி சீனியா் செகண்டரி பள்ளி வளாகத்தில் வருகிற மே 9-ஆம் தேதி தொடங்கி 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் புதுச்சேரி அணி சாா்பில் விளையாட அவ்வணிக்காக ஆரஞ்சு மெட்ரிக் பள்ளி மற்றும் இன்டா்நேஷனல் பள்ளி மாணவா்கள், ஆண்கள் பிரிவுக்காக எஸ்.ஆகாஷ், எஸ்.சிவா மற்றும் பெண்கள் பிரிவுக்காக தான்யா ஸ்ரீ, எஸ்.கிருஷ்ணவேணி, பி.ப்ரின்ஷூ ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
போட்டியில் விளையாட தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கோவா, கா்நாடகம், அந்தமான் நிக்கோபாா், புதுவை ஆகிய மாநிலங்களில் இருந்து அணிகள் பங்கேற்கின்றன என்று பள்ளித் தாளாளா் கே.சிவகுமாா் தெரிவித்தாா்.