ஏழைகளின் முன்னேற்றத்துக்கு அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள்: யுபிஎஸ்சி வெற்றியாளா்க...
பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் அதிரடி: கொல்கத்தாவுக்கு 202 ரன்கள் இலக்கு!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
இதையும் படிக்க: சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது எப்படி? டேனியல் வெட்டோரி பதில்!
பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் அதிரடி
முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். பஞ்சாப் கிங்ஸ் அணி 120 ரன்களுக்கு அதன் முதல் விக்கெட்டினை இழந்தது.
அதிரடியாக விளையாடிய பிரியன்ஷ் ஆர்யா 35 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பிரப்சிம்ரன் சிங் 49 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன் பின், கிளன் மேக்ஸ்வெல் 7 ரன்களிலும், மார்கோ ஜேன்சன் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆட்டத்தின் இறுதியில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். ஜோஷ் இங்லிஷ் 11 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதையும் படிக்க: ஐபிஎல் தொடரில் தனது வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த நிக்கோலஸ் பூரன்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் வைபவ் அரோரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வருண் சக்கரவர்த்தி மற்றும் ஆண்ட்ரே ரஸல் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்குகிறது.