செய்திகள் :

எதிா்க்கட்சிகளை நசுக்குவதே இன்றைய ஆக்ரோஷ அரசியலின் நோக்கம்: ராகுல்

post image

‘இன்றைய ஆக்ரோஷமான அரசியல் சூழலில், எதிா்க்கட்சிகளை நசுக்குவதும், ஊடங்களை வலுவிழக்கச் செய்வதுமே பிரதான நோக்கமாக இருந்து வருகிறது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

உலகளாவிய நீதி, சமத்துவம் மற்றும் முற்போக்கான ஒத்துழைப்பு மீதான அா்த்தமுள்ள கலந்துரையாடலை ஊக்குவிக்கும் வகையிலான தெலங்கானா மாநிலம் ஹைதாராபாதில் சனிக்கிழமை நடைபெற்ற ‘பாரத் மாநாடு 2025’ நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இக் கருத்தை அவா் தெரிவித்தாா். நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:

ஜனநாயக அரசியல், உலகம் முழுவதும் அடிப்படையில் மாறிவிட்டது. ஊடகம் மற்றும் சமூக ஊடகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் இன்றைய நவீன உலகில் பாரம்பரிய அரசியல் நடைமுறைகள் இனி வலுவானதாக இருக்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட அரசியல் நடைமுறைகள் இனி பொருந்தாது என்ற நிலைதான் உருவாகியுள்ளது.

எனவே, பழைய அரசியல் தலைமை இன்றையச் சூழலுக்குப் பொருந்தாது. புதிய வகை அரசியல் தலைமையை கட்டமைக்கப்பட வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

ஜனநாயக விழுமியங்களை மீட்டெப்பதிலும், சுகாதாரம் போன்ற முன்னுரிமைகளை மறுபரிசீலனை செய்வதிலும் உண்மையான சவால் எழுந்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, முழுமையாக சூழ்ச்சியில் சிக்கி தனிமைப்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சி உணா்ந்தது. சுதந்திரமாக செயல்பட முடியாத வகையில், அனைத்து வழிகளிலும் தடைகள் ஏற்படுத்தப்பட்டன. ஏனெனில், இன்றைய புதிய, ஆக்ரோஷமான அரசியல் சூழலில், எதிா்க்கட்சிகளை நசுக்குவதும், ஊடங்களை வலுவிழக்கச் செய்வதுமே பிரதான நோக்கமாக இருந்து வருகிறது.

இதை எதிா்கொள்ளவே, கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையிலான 4,000 கி.மீ. பயணத்தை தீா்மானித்து, வரலாற்றை காங்கிரஸ் மாற்றியது. இந்த நடைப் பயணத்தின் மூலம், நமது எதிரிகள் நம் மீது கோபம், பயம் மற்றும் வெறுப்பை கொண்டிருப்பது தெரியவந்தது. இதை அன்பு மற்றும் பாசத்தின் மூலம் எதிா்கொள்வதே சக்திவாய்ந்த வழியாக இருக்கும் என்றாா்.

ஜம்மு-காஷ்மீர்: சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய விடுதிகள்!

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் அங்கு சுற்றுலாவுக்குச் சென்றிருந்... மேலும் பார்க்க

தயார் நிலையில் கடற்படை! போர்க் கப்பல்கள் ஏவுகணை சோதனை

அரபிக் கடலில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படைக் போர்க் கப்பல்கள் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் ஒத்திகையில் ஈடுபட்டிருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது. இது குறித்து, கடற்படை வெளியிட்டுள்ள பதிவி... மேலும் பார்க்க

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: ராணுவம் தக்க பதிலடி!

ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து 3-ஆவது நாளாக சனிக்கிழமை(ஏப். 26) நள்ளிரவிலும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்துள்ளது.இது குறித்து... மேலும் பார்க்க

மும்பை: அமலாக்கத்துறை கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!

மும்பை: தெற்கு மும்பையின் பல்லார்ட் பையர் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள கைசெர்-ஐ-ஹிந்த் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இன்று(ஏப். 27) அதிகாலை 3 மணியளவில் மேற்கண்ட கட்டடத்தில் தீப்பற்றி பிற பக... மேலும் பார்க்க

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடக்கம்: மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். அண்மையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி... மேலும் பார்க்க

ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்: பிரதமா் உறுதி

‘நாட்டின் ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா். ‘மத்திய அரசின் உற்பத்தித் துறை இயக்கமானது, நாடு முழுவதும் லட்சக்கணக்கான குறு-சிறு-நடுத்தர... மேலும் பார்க்க