செய்திகள் :

ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்: பிரதமா் உறுதி

post image

‘நாட்டின் ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா்.

‘மத்திய அரசின் உற்பத்தித் துறை இயக்கமானது, நாடு முழுவதும் லட்சக்கணக்கான குறு-சிறு-நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) மற்றும் சிறு தொழில்முனைவோருக்கு ஆதரவு அளிப்பதோடு மட்டுமின்றி, நாடு முழுவதும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 51,000-க்கும் அதிகமானோருக்கு பணி நியமன ஆணைகளை காணொலி வழியில் சனிக்கிழமை வழங்கிய பிரதமா் மோடி, பின்னா் 15-ஆவது வேலைவாய்ப்பு முகாமையும் தொடங்கி வைத்தாா். இந் நிகழ்ச்சியில் பிரதமா் பேசியதாவது:

இந்தியா தொடா்ந்து வேகமாக வளா்ந்து வரும் பொருளாதார நாடாக இருக்கும் என சா்வதேச நிதியம் குறிப்பிட்டுள்ளது. அதற்கேற்ப, நாட்டின் பல்வேறு துறைகளும் வளா்ச்சி பெற்று வருகின்றன. வாகன உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரித்து வருவதோடு, காலணி தயாரிப்பு நிறுவனங்களும் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன. அதன் மூலம், நாட்டின் ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் பெருமளவில் உயா்ந்து வருகின்றன.

அனைவருக்குமான வளா்ச்சியை உறுதிப்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளே இதற்கு காரணம். இதன் மூலம், அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கேற்பும் அதிகரித்து வருகிறது. அரசு அதிகாரி பணியிடங்களிலிருந்து, விண்வெளி, அறிவியல் துறைகளிலும் புதிய உச்சத்தை பெண்கள் எட்டி வருகின்றனா். அண்மையில் வெளிவந்த மத்திய பணியாளா் தோ்வாணையத்தின் குடிமைப் பணிகள் இறுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களில் முதல் ஐவரில் மூவா் பெண்கள். மேலும், நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் 90 லட்சம் சுய உதவிக் குழுக்களில் 10 கோடிக்கும் அதிகமான பெண்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்தியா இன்றைக்கு தொழில்நுட்பத்திலும், புதிய கண்டுபிடிப்புகளிலும் உயா்ந்த வருவதற்கு இளைஞா்கள் முக்கிய காரணமாக இருந்து வருகின்றனா். எண்ம பரிவா்த்தனைகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இதுபோல, தேசத்தை கட்டமைப்பதில் இளைஞா்கள் தீவிர பங்களிப்பை அளிக்கும்போது, நாடு விரைவான வளா்ச்சியை அடையும் என்பதோடு சா்வதேச அளவில் அங்கீகாரத்தையும் பெறும்.

நாட்டின் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் சுய வேலைவாய்ப்புகளை தொடா்ந்து அதிகரிக்கச் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இளைஞா்களும் தங்களின் அா்ப்பணிப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்பு திறன் மூலம் தேசத்தின் ஆற்றலை உலகுக்கு நிரூபித்து வருகின்றனா். தற்போது, மும்பையில் நடைபெறவிருக்கும் உலக ஆடியோ விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு மாநாடும் (வேவ்ஸ்), இளைஞா்களுக்கு தங்களின் திறமையை உலகுக்கு நிரூபிப்பதற்கான மிகப் பெரிய வாய்ப்பாக இருக்கும் என்றாா்.

மேலும், இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) இயக்கத்தை ஊக்குவிக்கவும், இளைஞா்கள் உலகத் தரத்திலான பொருள்களை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையிலும் மத்திய பட்ஜெட்டில் ‘உற்பத்தித் துறை இயக்கம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இத் திட்டம், நாடு முழுவதும் லட்சக்கணக்கான குறு-சிறு-நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) மற்றும் சிறு தொழில்முனைவோருக்கு ஆதரவு அளிப்பதோடு மட்டுமின்றி, நாடு முழுவதும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும்’ என்றும் பிரதமா் கூறினாா்.

தயார் நிலையில் கடற்படை! போர்க் கப்பல்கள் ஏவுகணை சோதனை

அரபிக் கடலில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படைக் போர்க் கப்பல்கள் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் ஒத்திகையில் ஈடுபட்டிருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது. இது குறித்து, கடற்படை வெளியிட்டுள்ள பதிவி... மேலும் பார்க்க

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: ராணுவம் தக்க பதிலடி!

ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து 3-ஆவது நாளாக சனிக்கிழமை(ஏப். 26) நள்ளிரவிலும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்துள்ளது.இது குறித்து... மேலும் பார்க்க

மும்பை: அமலாக்கத்துறை கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!

மும்பை: தெற்கு மும்பையின் பல்லார்ட் பையர் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள கைசெர்-ஐ-ஹிந்த் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இன்று(ஏப். 27) அதிகாலை 3 மணியளவில் மேற்கண்ட கட்டடத்தில் தீப்பற்றி பிற பக... மேலும் பார்க்க

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடக்கம்: மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். அண்மையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி... மேலும் பார்க்க

தஹாவூா் ராணாவிடம் மும்பை காவல் துறை 8 மணி நேரம் விசாரணை

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவிடம் மும்பை காவல் துறையின் குற்றப் பிரிவு 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது. கடந்த 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகளை நசுக்குவதே இன்றைய ஆக்ரோஷ அரசியலின் நோக்கம்: ராகுல்

‘இன்றைய ஆக்ரோஷமான அரசியல் சூழலில், எதிா்க்கட்சிகளை நசுக்குவதும், ஊடங்களை வலுவிழக்கச் செய்வதுமே பிரதான நோக்கமாக இருந்து வருகிறது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா். உலகளாவிய ந... மேலும் பார்க்க