மெலானியா பிறந்தநாளுக்கு பரிசு வாங்க நேரமில்லை.. எப்படி சமாளித்தார் டிரம்ப்?
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப், தன்னுடைய மனைவி மெலானியா டிரம்ப் பிறந்தநாளை பரிசு வாங்க நேரமில்லாமல் எப்படி சமாளித்திருக்கிறார் என்பது பற்றி..
மெலானியா டிரம்ப் இன்று தனது 55வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அமெரிக்க அதிபராக இருக்கும் டிரம்ப் மிகப்பெரிய பரிசுகளைக் கொடுத்திருக்க முடியும் என்றாலும் பணிச்சுமை காரணமாக பரிசு வாங்க நேரமில்லாமல் இருந்துவிட்டார்.
தனது மனைவியின் பிறந்தநாளுக்கு பரிசுப்பொருள் வாங்க நேரமில்லாத நிலையிலும் அதனை ஈடுகட்ட சமயோஜிதமாக செயல்பட்டு ஒருவழியாகச் சமாளித்தும்விட்டார் டிரம்ப்.
ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில், வெள்ளிக்கிழமை, டொனால்ட் டிரம்ப் - மெலானியா தம்பதி இத்தாலி சென்றுவிட்டுத் திரும்பும்போது, அவருக்கு போயிங் விமானத்திலேயே இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் டிரம்ப்.
இது குறித்து டொனால்ட் டிரம்ப் கூறுகையில், இன்று அவர் பிறந்தநாளில் பணியில் சிக்கிக்கொண்டார் என்று செய்தியாளர்களிடம் கூறி சிரித்தார்.
மேலும், அவருக்காக பரிசுப் பொருள்கள் வாங்குவதற்கு எனக்கு நேரமில்லாமல் போய்விட்டது, சற்று வேலையாக இருந்துவிட்டேன், எனவே, ஏர் ஃபோர்ஸ் ஒன் போயிங் விமானத்திலேயே இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்துவிட்டேன், அவரை இன்று போயிங் விமானத்தில் இரவு உணவுக்கு அழைத்துச் செல்கிறேன், ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் அவருக்கு இன்று இரவு உணவு என்று கூறியிருக்கிறார்.
வெள்ளிக்கிழமை, போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் பங்கேற்க ரோம் சென்ற டிரம்ப் தம்பதி, இத்தாலி தலைநகரில் இரவு உணவு சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு, இறுதி அஞ்சலி செலுத்தியதும் நேராக அமெரிக்கா திரும்பிவிட்டார்கள்.
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகியிருக்கும் டிரம்ப், வரி விதிப்பு, உக்ரைன், ஈரான், காஸா போர் என பல்வேறு பிரச்னைகளில் மூழ்கியிருக்கும் நிலையில், சொந்த நிகழ்ச்சிகளுக்கு நேரம் செலவிட முடியாமல் இருந்தாலும், ஒருவழியாக பிறந்தநாளைக் கொண்டாடி சமாளித்துவிட்டார்