பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!
முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! - முதல்வர் அறிவிப்பு
தமிழக முன்னாள் எம்எல்எக்ளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் உயர்த்தப்படுவதாக பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர்,
"சட்டப்பேரவை மற்றும் மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ. 30,000-லிருந்து ரூ. 35,000 ஆக உயர்த்தப்படும்.
சட்டப்பேரவை மற்றும் மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் மாதம் ரூ. 15,000 -லிருந்து ரூ. 17,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப்படி ரூ. 75,000 என்பது ரூ. 1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். ஏற்கெனவே இந்த ஆண்டின் மருத்துவப்படி வழங்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள ரூ. 25,000 விதிகள் திருத்தம் செய்யப்பட்டபிறகு வழங்கப்படும்" என்று அறிவித்தார்.
இதையும் படிக்க | கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!