பீனிக்ஸ் - வீழான் வெளியீட்டுத் தேதி!
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்த பீனிக்ஸ் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் சேதுபதி, மகாராஜா திரைபடத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தார். தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
அவருடைய மகன் சூர்யா விஜய் சேதுபதி சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில் ‘பீனிக்ஸ் - வீழான்’ திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார்.
இப்படத்திலிருந்து சூர்யா சேதுபதி என்கிற பெயரில் திரைத்துறைக்கு வருகிறார். இப்படத்தின் முதல் பாடலான ’யாராண்ட’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.
கடந்த நவ.14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த இப்படம், தணிக்கைச் சான்றிதழ் பிரச்னைகளால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இப்படம் ஜூலை 4 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: ரெட்ரோவுடன் மோதலா? நானி கூறியதென்ன?