செய்திகள் :

சச்சின் : `வெளிநாடுகளிலும் செம ரீச்; அடுத்த ரீரிலீஸ்..!’ - அஜித் பட அப்டேட் கொடுத்த கலைப்புலி தாணு

post image

சச்சின் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. விஜய் நடிப்பில் 2005-ஆம் ஆண்டு வெளியான சச்சின் திரைப்படம், தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் விதமாக ஏப்ரல் 18 அன்று மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

சச்சின் ரீ ரிலீஸ் வெற்றியை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தாணு தலைமையில் வெற்றி விழா நடைபெற்றது. இந்த விழாவில் சச்சின் திரைப்படத்தின் ரீரிலீஸுக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவு குறித்து பேசி இருந்தார்.

இது குறித்து தயாரிப்பாளர் தாணு பேசியதாவது,

``தமிழ்நாட்டில் சுனாமி என்னும் பேரிழிவு ஏற்பட்ட அடுத்த நாள் தான் சச்சின் திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. சச்சின் திரைப்படம் 2005ல் வெளியானபோதே யாரும் பார்த்திடாத அளவு ரசிகர்கள் கூட்டம் இருந்தது. படத்தின் ஒரு மைல்ஸ்டோன் ஆக விஜய் பாடிய பாடல் இருந்தது.

2005ல் 200 தியேட்டர்களில் வெளியான சச்சின் படம் தற்போது கிட்டத்தட்ட 350 தியேட்டர்களில் ரீ ரீலீஸ் செய்யப்பட்டுள்ளது. தியேட்டரில் ஒளிபரப்பப்படும் ஸ்கிரீனிங் எண்ணிக்கையும் அதிகமாகிறது.

இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் சச்சின் திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. சிலோன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சச்சின் திரைப்படம் வெளியாக திரையரங்கம் கிடைத்தது. சச்சின் வெளியாகும் போது கிடைத்த லாபத்தை விட ரீ ரிலீஸ் செய்தபோது பத்து மடங்கு லாபம் கிடைத்துள்ளது” என்று கூறினார் தாணு.

அடுத்த ரீரிலீஸ்...

``அஜித் நடிப்பில் வெளியான "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" படம் தான் சச்சின் படத்திற்கு அப்புறம் நான் ரீ - ரிலீஸ் செய்யப்போகிற படம். இதுகுறித்து படத்தின் இயக்குநரிடம் பேசினேன். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

சச்சின் மாதிரி என்னிடம் எல்லோரும் கேட்கும் இன்னொரு படம் "காக்க காக்க".. இயக்குனர் கௌதம் என்னிடம் பலமுறை இது குறித்து பேசி இருக்கிறார். அதற்கான வேலையும் நடந்து கொண்டிருக்கிறது. 2026 இல் தெறி மற்றும் கபாலி படம் ரீலீஸ் ஆகும்” என்றும் கூறினார் தயாரிப்பாளர் தாணு.

Otha Rubai Tharen: ``அஜித் என்னை பார்த்ததும்.. மாறாத அந்த விஷயம்'' - நெகிழும் ஜான் பாபு மாஸ்டர்

நாட்டுப்புற பாட்டு' படம் ரிலீஸானப்போ பாடல்களும் நடனமும் எப்படி பெருசா பேசப்பட்டு எனர்ஜியைக் கொடுத்ததோ, அதே எனர்ஜியைத்தான் 'குட் பேட் அக்லி' படமும் கொடுத்திட்டிருக்கு. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ரச... மேலும் பார்க்க

HIT3: `லோகேஷ் கனகராஜின் LCU-வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன்’ - நடிகர் நானி ஓப்பன் டாக்

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானலோகேஷ் கனகராஜ்கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இருக்கிறார். LCU என... மேலும் பார்க்க

'நிச்சயம் படிக்கிறேன்' - ரசிகர் கொடுத்த ஸ்கிரிப்டை உடனே வாங்கி கொண்ட நானி

கொச்சியில் `ஹிட் 3' புரோமோஷன் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் நானி மற்றும் ஶ்ரீநிதி செட்டி கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் இடையில் நானியின் ரசிகர் ஒருவர் அவரின் பட ஸ்கிரிப்ட்டை நானியிடம் கொடுத்தார்... மேலும் பார்க்க

Love You: ஹீரோ, ஹீரோயின், இசை அனைத்தும் AI தான்; வெளியாகும் கன்னட படம்! - பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

ஏ.ஐ தொழில்நுட்பத்தை படத்தில் பயன்படுத்தி பார்த்திருப்போம். ஒரு படமே முழுக்க முழுக்க ஏ.ஐ ஆக இருந்தால் எப்படி இருக்கும்?படமே ஏ.ஐ என்றால் குழப்பம் வருகிறதா? அதாவது அந்தப் படத்தில் வரும் நடிகர்கள், பாடல்க... மேலும் பார்க்க

`திருமண நாள் அன்றே எங்கள் குட்டி தேவதையை வரவேற்கிறோம்’ - மீண்டும் அப்பா ஆனார் விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் பிஞ்சு விரல் புகைப்படத்தை பகிர்ந்து இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.`வெண்ணிலா கபடி குழு’ படத்தின்... மேலும் பார்க்க