என் பேட்டிங் வளர்ச்சிக்குக் காரணம் தினேஷ் கார்த்திக்: ஜிதேஷ் சர்மா
'நிச்சயம் படிக்கிறேன்' - ரசிகர் கொடுத்த ஸ்கிரிப்டை உடனே வாங்கி கொண்ட நானி
கொச்சியில் `ஹிட் 3' புரோமோஷன் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் நானி மற்றும் ஶ்ரீநிதி செட்டி கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் இடையில் நானியின் ரசிகர் ஒருவர் அவரின் பட ஸ்கிரிப்ட்டை நானியிடம் கொடுத்தார்.
அதை உடனே வாங்கிக்கொண்ட நானி அவரிடம், 'நான் இதை போகிற வழியில் படிக்கிறேன் அல்லது விமானத்தில் ஏறியதும் படிக்கிறேன். இது என்னுடைய பணி. என்னுடைய கடமை.
இதை நான் உங்களுக்காக செய்யவில்லை. எனக்காக செய்கிறேன். உங்களுக்கு சினிமாவின் மீது இருக்கும் ஆர்வம் தெரிகிறது.

இந்த ஆர்வம் தொடர்ந்தால் நான் இல்லையென்றாலும், வேறொருவர் நிச்சயம் வருவார். நிச்சயம் நீங்கள் அடைய வேண்டிய இடத்தை அடைந்துவிடுவீர்கள்" என்று கூறினார். வரும் மே 1-ம் தேதி ஹிட் 3 படம் வெளியாக உள்ளது.