என்எல்சி தொமுச-வை தனிப்பெரும் சங்கமாக உருவாக்கித் தர வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண...
Travel Contest: வெளிநாட்டுக்கு சுற்றுலா போறீங்களா? இதையெல்லாம் முக்கியமா கவனிங்க! - அனுபவ பகிர்வு
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
இன்று இருக்கக்கூடிய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையில் சுற்றுலா போன்றவை நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கிறது விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்ல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவர்.
வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை முன்பு இருந்ததை விட தற்போது அதிகமாகி கொண்டு வருகிறது.

பல புதிய இடங்களுக்குச் செல்வதும், பல்வேறு மக்களைக் காண்பதும் நம் உணர்வை மட்டுமில்லாது உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். மேலும் மனதளவிலும், அறிவுப்பூர்வமாகவும் பல நன்மைகளைப் பெறுகிறோம்.
புதிய புதிய மனிதர்களுடன் உரையாடுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இதனால் வேறு நாடுகளில் வசிக்கும் மனிதர்களின் இயல்புகளைப் பற்றி புரிந்து கொள்ள முடியும். அதை தவிர நவீன அறிவியல் முன்னேற்றத்தையும், தொழில் வளர்ச்சியையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பாகவும் அமையும்.
சுற்றுலா பயணம் கிளம்பும் முன் நாம் சிலவற்றில் கவனம் செலுத்தினால் நம் பயணத்தை இனிமையாக அனுபவிக்க முடியும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்த போது நான் தெரிந்து கொண்டவை, பயணத்திற்கு முன் பொதுவாக கவனிக்க வேண்டியவை மற்றும் வெளிநாடுகளில் கடைபிடிக்க வேண்டியவை போன்றவைகளில் என் அனுபவங்கள் சிலவற்றை இங்கு பகிர விரும்புகிறேன்.

பேக்கேஜ் டூரில் செல்லும்போது டூர் ஆபரேட்டரைப் பற்றி நன்கு விசாரித்து அறிவது முக்கியம். வெளிநாட்டுப் பயணத்தை திட்டமிடும்போது நன்கு தெரிந்த பயண நிறுவனத்தை தேர்வு செய்து பின் தேதி, புறப்படும் நேரத்தை பல முறை சரி பார்த்து, பயண விவரங்கள் அனைத்தையும் முழுவதுமாக படித்து தெரிந்து கொண்டு பயணம் செய்வது நல்லது.
இம்மிகிரேஷன் (Immigration) சரிபார்ப்புகள் முடிந்த பிறகு பாஸ்போர்ட் மற்றும் பிற ஆவணங்களை அங்கேயே தவற விட்டு விடாமல் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
சில சமயங்களில் கூட்டம் அதிகமாக இருக்கக் கூடும். அங்கு தரப்படும் சிறு காகித விவரங்களை கூட நாம் திரும்பி வரும் போது கொடுக்க வேண்டி வரலாம். பாஸ்போர்ட்டின் சில பிரதிகளை எடுத்து நம் பெட்டிகளில் வைத்துக் கொள்வது நல்லது.

சில சமயங்களில் பயணத்தின்போது பண நஷ்டத்துடன் மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடலாம். சில விஷயங்கள் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் வெளி நாட்டு பயணங்களின் போது புறப்படும் நேரத்தைக் கூட (ZERO HOURS) குழப்பத்தால் சரியாக கவனிக்காமல் விமானத்தையே தவற விட்டவர்கள் உள்ளனர். இதில் என் சொந்த அனுபவமும் அடங்கும்.
அதேபோல் வெளிநாடுகளில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு விமானத்தில் (domestic flight) செல்லும் முன் அனுமதிக்கப்பட்ட லக்கேஜ் எடையை தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் எடுத்துச் சென்றால் விமான நிலையத்தில் அதிக எடைக்கான கட்டணம் செலுத்துவதை தவிர்க்கலாம். வெவ்வேறு நாடுகளில் உள் நாட்டு விமானப் பயணத்துக்கு அனுமதிக்கப்பட்ட லக்கேஜ் எடை வேறுபடலாம்.
சில நாடுகளில் சில பொருள்கள் தடை செய்யப்பட்டிருக்கும். அதையும் கவனித்தில் கொள்ள வேண்டும். பேக்கேஜ் பயணங்களில் குழுவாக சென்றாலும் கூட அந்த ஊரில் நாம் தங்குமிடம் / ஹோட்டல் முகவரியை கைவசம் வைத்திருந்தால் பயணத்தின் போது நம் குழுவை தவற விட்டாலும் தங்குமிடத்துக்கு வந்து விடலாம்.
ஜப்பான், ஜெர்மனி போன்ற இடங்களில் பெரும்பாலும் அந்த நாட்டு மொழிகளில் தான் பேசுவார்கள்.
கடைகளில் நாம் சில பொருள்களை வாங்கி விட்டு பணம் செலுத்த மறந்து போய் வெளியேறினால் போலீசாரால் கைது செய்யப்படப்படும் நிலை கூட ஏற்படலாம். கவனமாக இருக்க வேண்டும்.
வேலை நிமித்தமாக மற்றும் சுற்றுலாவாக பலர் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். அவ்வாறு செல்லும்போது அந்நாட்டின் சட்ட விதி முறைகள், பழக்க வழக்கங்களை தெரிந்து கொண்டு, அதற்கேற்றார்போல் மாற்றிக் கொள்ள வேண்டும்.

சிங்கப்பூரில் குப்பைகளை கண்ட இடங்களில் வீசி எறிந்தால் உடனே தண்டனை கிடைக்கும். ஜப்பானிய மக்கள் தன் நாட்டை சுத்தமாக வைப்பதை தங்கள் கடமையாகக் கருதுவர். அவ்வாறே ரயில், பஸ் பயணங்களில் சத்தமாகப் பேசுவதை அவர்கள் விரும்புவதில்லை. நாமும் அந்தந்த நாட்டிற்கு ஏற்றவாறு நம் பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்
ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளில் கழிவறைகள் புதிய டெக்னாஜியைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டிருக்கும். அதை உபயோகிக்கும் முறைகளை தெரிந்து கொண்டு பயன்படுத்தினால் சுலபமாக இருக்கும்.
ஹோட்டல்களில் உணவு உண்ணும் போதும் கூட சில ஒழுக்க முறைகளை கடைபிடிக்க வேண்டி வரும். டீயைக் கலக்கும் போது பக்கவாட்டில் ஸ்பூன் இடிக்கும் சப்தம் வராமல் கலக்க வேண்டும். கலந்த பின் ஸ்பூனை சாஸரில் வைக்க வேண்டும். சிலி போன்ற இடங்களில் பர்கராக இருந்தாலும் கையினால் சாப்பிடுவதை அவர்கள் விரும்புவதில்லை.

இவ்வாறு அந்தந்த நாடுகளின் விதி முறைகள், பழக்கங்களுக்கு ஏற்றார் போல் நம்மை மாற்றிக் கொண்டால் பிரச்னைகள் ஏதும் வராமல் அங்கு நிம்மதியாக நாம் சுற்றுலாவை அனுபவிக்கலாம்.
அதனால் வெளிநாட்டுப் பயணத்தின்போது சிறு சிறு விஷயங்களில் கூட கவனம் செலுத்தி, பயண விவரங்கள் மற்றும் செல்லும் நாட்டைப் பற்றிய விவரங்கள்,விதிமுறைகள் அனைத்தையும் முழுவதும் தெரிந்து கொண்டு பயணம் செல்வது நலம். இதனால் நம் பயணத்தையும் டென்ஷன் இல்லாமல் நன்கு அனுபவிக்க முடியும்.
வி. ரத்தினா ,
ஹைதராபாத்.
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.