செய்திகள் :

அனிமல், மார்கோ படங்களைவிட வித்தியாசமான வன்முறை..! ஹிட் 3 படம் குறித்து நானி!

post image

அனிமல், மார்கோ படங்களைவிட ஹிட் 3 படத்தின் வன்முறை வித்தியாசமானதாக இருக்குமென நானி கூறியுள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நானியின் நடிப்பில் கடைசியாக வெளியான சரிபோத சனிவாரம் (சூர்யாவின் சனிக்கிழமை) திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றிப் படமானது.

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் படத்தில் தற்போது நடித்து வருகிறார். அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக இது உருவாகி வருகிறது.

சைலேஜ் கொலனு இயக்கத்தில் நானி நடித்த ஹிட் - 3 படத்தின் டிரைலர் சமீபத்தொல் வெளியாகி கவனம் பெற்றது.

வால் போஸ்டர் சினிமா, அனானிமஸ் புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் வருகிற மே.1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தில் நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். முதலிரண்டு பாகங்கள் அபார வெற்றி பெற்றது.

இந்தப் படத்துக்கு ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால் வன்முறை அதிகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

மார்கோ, அனிமல் படத்தினை விட இந்தப் படத்தின் வன்முறை வித்தியாசமாக இருக்குமெனக் கூறியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

நேர்காணல் ஒன்றில் நானி பேசியதாவது:

ஹிட் 3 படத்தின் வன்முறை அதிகமான இருப்பதாக டிரைலரில் தெரியும். ஆனால், படமாக பார்க்கும்போது வேறுமாதிரி இருக்கும்.

விவரணைகளுடன் விசாரணை செய்துகொண்டே த்ரில்லர் கதையாக பயணிக்கும் இந்தப் படத்தில் வன்முறை வேண்டுமென்றே இருப்பதாகத் தெரியாது.

கதையில் அடுத்து என்ன நிகழ்கிறது, ஏன் அப்படி நடக்கிறது? என சுவாரசியமாக பயணிக்கும் இந்தப் படத்தில் வரும் வன்முறைக்கு நீங்களே கை தட்டல் அளிப்பீர்கள்.

எழுத்து நன்றாக இருக்கும்போது இப்படியான விஷயங்கள் நடக்கும். திரையரங்கில் நல்ல அனுபவத்தை அளிக்கும். அனிமல் படமும் இதைச் செய்தது. மார்கோ பார்க்கவில்லை. இந்தப் படத்தின் கதை வேறுமாதிரி இருக்கும் என்றார்.

ஜெயிலர் 2 படத்தில் வில்லனாக ஃபஹத் ஃபாசில்?

நடிகர் ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படத்தில் ஃபஹத் ஃபாசில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ரஜினிகாந்த் நடிப்பில் 2023-இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது ஜெயிலர் திரைப்படம். இப்படத்தை இயக்குநர... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் இரண்டாவது பாகம் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.அரவிந்த் ... மேலும் பார்க்க

மயோனைஸ் வடிவில் விஷம்.. தடை விதிக்கும் அளவுக்கு ஆபத்தா?

அசைவப் பிரியர்களோ, சைவப் பிரியர்களோ, மயோனைஸ் பிரியர்கள் ஏராளம். அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தமிழகத்தில் மயோனைஸ் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஒரு பர்கராக இருக்கட்டும், சிக்கன் 65 ஆ... மேலும் பார்க்க

சமந்தா தயாரித்துள்ள முதல் படத்தின் டிரைலர் அப்டேட்!

சுபம் படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட்டினை தனது எக்ஸ் பக்கத்தில் சமந்தா வெளியிட்டுள்ளார். சமந்தா தயாரித்துள்ள முதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சுபம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், சீரியல் ... மேலும் பார்க்க

சிம்பு 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்!

நடிகர் சிம்புவின் 49ஆவது படத்தில் நடிப்பதை நடிகர் சந்தானம் உறுதி செய்துள்ளார். நடிகர் சிலம்பரசனின் 42-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது 49-ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானது. தற்காலிகமாக இ... மேலும் பார்க்க

ரெட்ரோ புதிய போஸ்டர்!

சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ள ரெட்ரோ திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாகவும... மேலும் பார்க்க