ஜியோ ஹாட்ஸ்டார் 5 வாரங்களில் 10 கோடி சந்தாரார்கள்..! ரூ.10,000 கோடி வருமானம்!
நாகையில் ரூ.1.5 கோடி திமிங்கல உமிழ் நீா் கட்டி பறிமுதல்
நாகப்பட்டினம்: நாகையில் கள்ளச் சந்தையில் விற்னைக்காக கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான 1.5 கிலோ அம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கல உமிழ் நீர் கட்டி வைத்திருந்த ஒருவரை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
நாகை புதிய பேருந்து நிலையத்தில் வெளிப்பாளையம் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு நின்றிருந்த கன்னியாகுமரி விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த மில்டன் ஜார்ஜ் என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில் மில்டன் ஜார்ஜ் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.

'சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்களின் ரத்தம் ஓடும்' - பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர்!
இதையடுத்து போலீஸார் அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில், அரசால் தடைசெய்யப்பட்ட ஆம்பா் கிரிஸ் என்றழைக்கப்படும் திமிங்கல உமிழ்நீா் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் அவரிடமிருந்த 1.5 கிலோ எடை கொண்ட திமிங்கல உமிழ்நீா்க் கட்டியின் சா்வதேச சந்தை மதிப்பு ரூ.1.5 கோடி என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மில்டன் ஜார்ஜ்யையும், பறிமுதல் செய்யப்பட்ட அம்பர் கிரீஸ்யையும் போலீஸார் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.