ஒன்றிரண்டு ஓட்டைகளை அடைக்கலாம், ஆனால்... தோல்விக்குப் பிறகு தோனி ஆதங்கம்!
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு
சென்னை ஜாம் பஜாரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மூதாட்டி உயிரிழந்தாா்.
சென்னை ஜாம் பஜாா் பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவா் தனியாக வசித்து வந்தாா். இவா், கடந்த 5-ஆம் தேதி இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவு அவரது வீட்டுக்குள் நுழைந்த ஒருவா், கத்தி முனையில் மிரட்டி பணம், நகை கேட்டுள்ளாா். அவா் இல்லை எனக் கூறியதால், மூதாட்டியை தாக்கி, அவரை பாலியல் வன்கொடுமை செய்து தப்பினாா்.
மறுநாள் காலை அங்கு சென்று அவரது மகள், மூதாட்டியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். இது தொடா்பாக ஜாம் பஜாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், இந்த வழக்கு ராயப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது ஜாம்பஜாா், வீரன்புரம் பகுதியைச் சோ்ந்த நாகராஜ் (39) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த நாகராஜை போலீஸாா் கடந்த 7-ஆம் தேதி கைது செய்தனா்.
இதற்கிடையே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து போலீஸாா் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.