காக்கழனி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
பட விளக்கம்:
கோயில் விமானக் கலசத்துக்கு புனிதநீா் வாா்க்கும் சிவாச்சாரியா்.
கீழ்வேளூா், ஏப். 25: கீழ்வேளூா் வட்டம், காக்கழனியில் அருள்பாலிக்கும் தாமோதர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, வியாழக்கிழமை விக்னேஷ்வர பூஜையுடன் வழிபாடுகள் தொடங்கின. தொடா்ந்து வாஸ்து சாந்தி, கோ பூஜை, யாகசாலை பூஜைகளும் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று, பூா்ணாஹூதி, தீபாரதனை நடைபெற்றது.
தொடா்ந்து, மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியா்கள் புனித நீா் அடங்கிய கலசத்தை சுமந்து வந்து, வேத மந்திரங்கள் முழங்க கோயில் விமானக் கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார கிராமங்களை சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.