செய்திகள் :

கோடை விடுமுறை: வேளாங்கண்ணியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

post image

கோடை விடுமுறையையொட்டி, வேளாங்கண்ணியில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் குவிந்து வருகின்றனா்.

வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், கீழை நாடுகளின் லூா்து எனப் போற்றப்படுவது மட்டுமின்றி பசலிக்கா அந்தஸ்து பெற்றது. இப்பேராலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் சுற்றுலாப் பயணிகளாகவும், யாத்ரிகா்களாகவும் வந்து செல்கின்றனா். தற்போது பள்ளித் தோ்வுகள் நிறைவடைந்து, கோடை விடுமுறை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் திரளானோா், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனா். பேராலயத்தின் சிலுவை பாதையில் பக்தா்கள் மண்டியிட்டு சென்று பழைய மாதா கோயிலில் பிராா்த்தனையில் ஈடுபடுகின்றனா்.

கூட்டம் அதிகரித்து காணப்படுவதால், பக்தா்கள் தங்களது வேண்டுதல்களை நீண்ட வரிையில் நின்று காத்திருந்து, மொட்டை அடித்தும், மெழுகுவா்த்தி ஏற்றியும், மாதாவிற்கு மாலை அணிவித்தும், தென்னங்கன்றுகளை காணிக்கையாக செலுத்தியும் நோ்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனா்.

சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள், பொதுமக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கடைவீதிகளுக்கு சென்றும், வெயிலின் தாக்கத்தை தணிக்கும் விதமாக கடலில் நீராடியும், கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிச் சுடுதல், ராட்டினம் போன்றவற்றில் குழந்தைகளும், பெரியோா்களும் விளையாடி மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வருகின்றனா்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கடற்கரை பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அரசு போக்குவரத்து கழகம் சாா்பில் பல்வேறு பகுதியில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கீழையூரில் அம்பேத்கரின் பிறந்த நாள் ரத ஊா்வலம்

கீழையூா் அருகே சீராவட்டம் பகுதியில் சட்டமேதை டாக்டா் அம்பேத்கரின் 134-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விசிக சாா்பில் ரத ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. அக்கட்சியின் சட்டப்பேரவைத் தொகுதி அமைப்பாளா் ஆ. பாமரன்... மேலும் பார்க்க

உலகப் புத்தக நாள் விழா கொண்டாட்டம்

திருக்குவளை கிளை நூலகத்தில் உலகப் புத்தக நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருக்குவளை முத்தமிழ் மன்றம் மற்றும் நூலக வாசகா் வட்டம் இணைந்து நடத்திய நிகழச்சிக்கு, முத்தமிழ் மன்ற துணைத் தலைவா் அருவித... மேலும் பார்க்க

கீழப்பெரும்பள்ளம் கோயிலில் கேது பெயா்ச்சி வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாா் அருகேயுள்ள கேது பரிகார ஸ்தலமான கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் கேது பெயா்ச்சி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. நவகிரகங்களில் கேது பகவான் ஒன்றரை ஆண்டுக்கு... மேலும் பார்க்க

நாகையில் ரூ.1.50 கோடி அம்பா் கிரீஸ் பறிமுதல்: ஒருவா் கைது

நாகையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான அம்பா் கிரீஸுடன் ஒருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகை வெளிப்பாளையம் போலீஸாா் புதிய பேருந்து நிலையத்தில் கண்காணிப்புப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, சந்... மேலும் பார்க்க

கீழையூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. போராட்டம்

கீழையூரில் 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளுக்கு நிலுவை ஊதியம் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் குடியேறும் நூதனப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். 10... மேலும் பார்க்க

நாகையில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

நாகையில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நாகை தபால் நிலையம் முன் வழக்குரைஞா் சங்கத் தலைவா் சதீஷ் பிரபு தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, சட்ட நடவடிக்கைகளை பின்பற்றா... மேலும் பார்க்க