மகப்பேறு விடுப்பு: முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
நாகையில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
நாகையில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகை தபால் நிலையம் முன் வழக்குரைஞா் சங்கத் தலைவா் சதீஷ் பிரபு தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, சட்ட நடவடிக்கைகளை பின்பற்றாமலும், நீதிமன்ற நடவடிக்கைகளிலும் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி முழக்கங்களை எழுப்பினா்.
மேலும், வழக்குரைஞா்களை அலட்சியப்படுத்தும் இணை ஆணையரை பணியிட மாற்றம் செய்யவேண்டும் என வலியுறுத்தினா். முன்னதாக, நாகை வழக்குரைஞா் சங்கத்தினா் இக்கோரிக்கையை வலியுறுத்தி பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
மூத்த வழக்குரைஞா் ராமன், வழக்குரைஞா்கள் சண்முகம், அன்பழகன், இளங்கோ, ஐயப்பன், ரத்தின பாண்டியன், தினேஷ் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.