பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ
ஏப். 30-ல் அறிமுகமாகிறது மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ!
மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் ஏப்ரல் 30ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.
எட்ஜ் 60 வரிசையில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என மோட்டோரோலா குறிப்பிட்டுள்ளது.
கேமரா, பேட்டரி திறன் மற்றும் புற வடிவத்தில் மேம்படுத்தப்பட்டுள்ள எட்ஜ் 60 ப்ரோ, அறிமுகமாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது மோட்டோரோலா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதலில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அங்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்திய சந்தைகளுக்கும் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ அறிமுகமாகிறது.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்து இணையத்தில் பல்வேறுவிதமான தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், உண்மையான சிறப்புகள் என்னென்ன என்பது குறித்து காணலாம்.
எட்ஜ் 60 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன் 6.77 அங்குல திரை கொண்டது. அமோல்ட் ( AMOLED) அம்சத்துடன் பயன்படுத்துவதற்கு சுமுகமாக இருக்கும் வகையில் 144 Hz திறன் கொண்டது.
மீடியாடெக் டைமன்சிட்டி 8350 புராசஸருடன் 8GB / 12GB செயலிகளுக்கான உள்நினைவகத்தையும் 512GB கோப்புகளுக்கான நினைவகத்தையும் கொண்டுள்ளது.
இதில் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 50MP மெயின் கேமரா, 50MP டெலிபோட்டோ லென்ஸ், 3x ஜூம் லென்ஸ் என மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்பக்கமும் 50MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலாவில் மற்ற ஸ்மார்ட்போன்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதைப் போன்று அல்லாமல், கூடுதலாக பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. 6000mAh பேட்டரி திறனுடன் 90W அதிவேகமாக சார்ஜ் செய்யும் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.
IP68 + IP69 என நீர் புகாத்தன்மை மற்றும் தூசு சேராத்தன்மை கொண்ட அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.
புற வடிவத்தின் சிறப்பு
மற்ற ஸ்மார்ட்போன்களைப் போல் அல்லாமல், தோல் வடிவ புறத்தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், பின்புறத்தில் கூடுதலாக எந்தவொரு பாதுகாப்பு கவசங்களும் தேவைப்படாது. திரையிலேயே விரல் தொடுகை சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.
விலை எவ்வளவு?
ஏப். 30ஆம் தேதி முதல், இந்திய சந்தையில் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ, ரூ. 31,999-க்கு கிடைக்கும். ஃபிளிப்கார்ட் இணையதளத்திலும் மோட்டோரோலா விற்பனைக் கிளைகளிலும் இதனை பெற்றுக்கொள்ளலாம்.
இதையும் படிக்க | ஜியோ நிகர லாபம் 26% அதிகரிப்பு