மாற்று இடத்தில் திரெளபதி அம்மன் கோயில் கட்ட தானம்பட்டி கிராம மக்கள் எதிா்ப்பு
பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ
பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக காஷ்மீரில் 14 பேரின் பட்டியலை தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ளது.
இதில் பெரும்பாலானோர் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்ல என்றும், பாகிஸ்தானைச் சேர்ந்த அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் காஷ்மீரின் புல்வாமா, ஷோபியான், அனந்த்நாக், அவந்திபோரா, குல்காம் மற்றும் சோபர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் என்ஐஏ தெரிவித்துள்ளது.
இதில் 8 பேர் லஷ்கர் இ தொய்பா அமைப்புடனும், 3 பேர் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்புடனும், மேலும் 3 பேர் ஹிஸ்புல் முஹாஜிதீன் அமைப்புடனும் தொடர்பில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா நகரமான, அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பெஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று (ஏப். 22) சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 3 தமிழர்கள் உள்பட 17 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இது குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தாக்குதல் சம்பவம் நடந்த பைசாரான் பள்ளத்தாக்கிலும், பஹல்காம் பகுதியிலும் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளுக்கு உதவிகரமாக இருந்த உள்ளூர் மக்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள தகவலின்படி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் 60 பேர் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்து வருவதாகத் தெரிகிறது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக புலனாய்வுப் பிரிவினர் 14 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக உள்ளனர். 20 அல்லது அதற்கு குறைவான வயதுள்ளவர்களே.
இவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் என்ஐஏ குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க | பஹல்காம் தாக்குதல்: சீனா யார் பக்கம்?