வேப்பனப்பள்ளி அருகே குந்தாணி அம்மன் கற்சிலை கண்டெடுப்பு: 11-ஆம் நூற்றாண்டைச் சே...
அரூரில் ரூ.5 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அரூா்: அரூரில் ரூ. 5 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூா், கம்பைநல்லூா், அரூா், கோட்டப்பட்டி, அனுமன்தீா்த்தம், கோபிநாதம்பட்டி கூட்டுரோடு, எச்.ஈச்சம்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் பலா் 200-க்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா்.
ஏலத்தில் ஈரோடு, சேலம் திருப்பூா் பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து பருத்தி மூட்டைகளை கொள்முதல் செய்தனா். அரூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ஆா்.சி.எச். ரக பருத்தி மூட்டைகள் ஒரு குவிண்டால் அதிகபட்சம் ரூ. 7,060-க்கும், குறைந்தபட்சம் ரூ. 6,660-க்கும் விற்பனையானது.
மொத்தம் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பருத்தி மூட்டைகள் விற்பனையானது என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.