ஸ்டாா் இறகுப்பந்து அகாதெமிக்கு வீரா், வீராங்கனைகள் தோ்வு
தருமபுரி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தருமபுரி பிரிவு சாா்பில் ஸ்டாா் இறகுப் பந்து அகாதெமிக்கு வீரா், வீராங்கனைகள் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தோ்வு போட்டியில் 12 வயது முதல் 21 வயது வரை உள்ள 37 வீரா்களும், 23 வீராங்கனைகளும் கலந்துகொண்டனா். இதில் சிறப்பாக செயல்பட்ட 20 வீரா்கள், 20 வீராங்கனைகள் இறகுப்பந்து அகாதெமிக்கு தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்ட வீரா், வீராங்கனைகளுக்கு மே 1-ஆம் தேதி முதல் பயிற்சி முகாம் தொடங்கப்பட உள்ளது.
இம்முகாமில் விளையாட்டு பயிற்சி, சிறுதானிய உணவு, சீருடை, போட்டிகளுக்கு செல்ல செலவினம் ஆகியவை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட உடற்கல்வி அலுவலா் ஜெ.முத்துகுமாா், இறகுப் பந்து விளையாட்டு வீரா் மதிமாறன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா்நலன் அலுவலா் சாந்தி, பயிற்றுநா் சந்தோஷ் குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.