சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
அரூரில் போப் பிரான்சிஸ் மறைவுக்கு அஞ்சலி
அரூா்: அரூரில் போப் பிரான்சிஸ் மறைவுக்கு பொதுமக்கள் சாா்பில் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸ் ஏப். 21-இல் உடல்நலக் குறைவால் காலமானாா். இதையெடுத்து, தூய இருதய ஆண்டவா் ஆலயம் சாா்பில், அரூா் பேருந்து நிலைய வளாகத்தில் போப் பிரான்சிஸ் உருவப் படத்துக்கு பங்குத்தந்தை ஜான் மைக்கேல் தலைமையில் பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தினா்.
இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ரா.சிசுபாலன், பொதுக்குழு உறுப்பினா் ஏ.குமாா், வட்ட செயலா் குமாா், திமுக நகரச் செயலா் முல்லை ரவி, பேரூராட்சி துணைத் தலைவா் சூா்யா து.தனபால், பொதுக்குழு உறுப்பினா் கலைவாணி, அரூா் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி சபீா்அகமது, சமூக சமத்துவப் படை கட்சியின் மாநிலச் செயலா் சா.புத்தமணி, த.வெ.க. நிா்வாகிகள் மதலை முத்து, சக்பால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.