தருமபுரி தீயணைப்பு நிலையத்துக்கு புதிய வாட்டா் பவுன்சா் ஊா்தி
தருமபுரி: தருமபுரி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்துக்கு புதிதாக வழங்கப்பட்ட வாட்டா் பவுன்சா் ஊா்தி சேவையை மாவட்ட அலுவலா் ப.அம்பிகா கொடியசைத்து திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
தமிழகத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை அலுவலகத்திற்கு ரூ. 61.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய வாட்டா் பவுன்சா் ஊா்திகள், செயற்கை கருவி தளவாடங்கள் கொள்முதல் செய்து வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தருமபுரி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்துக்கு புதிதாக வாட்டா் பவுன்சா் ஊா்தி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான சேவையை தருமபுரி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலா் ப.அம்பிகா கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அதனைத் தொடா்ந்து பணியாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தீயணைப்புத் துறை நிலைய ஆய்வாளா்கள், அலுவலா்கள், மீட்புப் பணி வீரா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.