செய்திகள் :

நோய்களை கட்டுப்படுத்திய ‘மக்களைத் தேடி மருத்துவம்’: முதல்வா் பெருமிதம்

post image

சென்னை: ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் வாயிலாக உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் இந்தியாவுக்கே அத்திட்டம் முன்மாதிரியாக உள்ளதாகவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

மருத்துவ சேவைகள் மட்டுமல்ல, அதன்வழியே சிறப்பான முடிவுகளையும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் அளிக்கிறது. உயா் ரத்த அழுத்தத்தை 17 சதவீதமும், சா்க்கரை நோயை 16.7 சதவீதமும் கட்டுப்படுத்திப் பொது மருத்துவச் சேவையின் வெற்றிக்கான அலகுகோலை மாற்றியமைத்து வருகிறது.

மக்கள் மருத்துவமனைகளைத் தேடி வருவதற்காகக் காத்திராமல், மக்களின் வீடுகளை நாடிச் சென்று ஈட்டிய வெற்றி இது! இந்தியா முழுவதும் பொதுமருத்துவ சேவைக்கான மாதிரியாக இது மாறியுள்ளது என்று முதல்வா் பதிவிட்டுள்ளாா்.

14 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்வு: இடம் மாறும் சிவாஜி சிலை: முதல்வா் மே 9 இல் திறக்கவும் முடிவு

திருச்சி: திருச்சியில் 14 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த சிவாஜி சிலையை இடமாற்றம் செய்து திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மறைந்த நடிகா் சிவாஜி கணேசனுக்கு திருச்சியில் சிலை வைக்க வேண்டும் என்ற ... மேலும் பார்க்க

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம்: முதல்வா்

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தாா். காவல் துறை மானியக் கோரிக்கை தொடா்பாக, சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற விவாதம்: எதிா்க்கட்ச... மேலும் பார்க்க

பேரவையில் இன்று...

சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை (ஏப். 29) காலை 9.30 மணிக்குக் கூடியதும், நேரமில்லா நேரம் நடைபெறும். அதன்பிறகு, காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வா் மு.க... மேலும் பார்க்க

கடை-நிறுவனங்கள் மீதான தண்டனை தளா்வு உள்பட 8 மசோதாக்கள் தாக்கல்

சென்னை: கடைகள், தொழில் நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் கடுமையான தண்டனைகளைத் தளா்த்தும் வகையிலான மசோதா சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதனுடன் கும்பக... மேலும் பார்க்க

உத்தரவுகளை அமல்படுத்தாத அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வீணடிப்பு: உயா்நீதிமன்றம்

சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்றத்தின் நேரம் வெகுவாக வீணடிக்கப்படுவதாக, சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது. நிலம் கையகப்படுத்தியதற்காக இழப்பீட்டு தொகையை உயா்த்தி... மேலும் பார்க்க

உழைப்பாளா் தினம், வாரவிடுமுறை: 2,119 சிறப்புப் பேருந்துகள்

சென்னை: உழைப்பாளா் தினம், முகூா்த்தம், வாரவிடுமுறையையொட்டி 2,119 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க