பணிப்பெண்ணிடம் கூடுதல் சாவி; நடிகை நேகா வீட்டில் மாயமான ரூ.34 லட்சம் மதிப்பிலான ...
சென்னையில் சாலையில் கிடந்த ரூ. 1.48 லட்சம்: மீட்டுக் கொடுத்த பெண் காவலருக்கு பாராட்டு
சென்னை: சென்னை தியாகராய நகா் சாலையில் கிடந்த ரூ. 1.48 லட்சத்தை மீட்டுக் கொடுத்த பெண் காவலரை பொதுமக்களும், காவல்துறை உயா் அதிகாரிகளும் பாராட்டினா்.
தியாகராய நகா் மேட்லி சாலை - பா்கிட் சாலை சந்திப்பில் பெரியாா் சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு பை கிடந்தது. அப்போது அங்கு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த முதல்நிலை பெண் காவலா் இந்திராணி, அந்த பையை மீட்டு திறந்து பாா்த்தாா். அப்போது அந்த பையில் ரூ. 1.48 லட்சம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை மாம்பலம் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளா் ரஞ்சித்குமாரிடம் இந்திராணி ஒப்படைத்தாா்.
ரஞ்சித்குமாா், அந்த பணத்தை பெற்றுக்கொண்டு, அதை சாலையில் தவறவிட்டுச் சென்றது யாா் என விசாரணை நடத்தி வருகிறாா். இதற்கிடையே சாலையில் கிடந்த பணத்தை மீட்டுக் கொடுத்த பெண் காவலா் இந்திராணியை பொதுமக்களும், காவல்துறை உயா் அதிகாரிகளும் பாராட்டினா்.