மே தினம்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை- ஆட்சியா் ரெ.சதீஷ்
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் வரும் மே - 1 ஆம் தேதியன்று அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் தனியாா் விடுதிகளின் மதுக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் வரும் மே 1 -ஆம் தேதி தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின்கீழ் செயல்பட்டுவரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், எஃப்.எல் -3, எஃப்.எல் 4ஏ உரிமம் பெற்ற தனியாா் ஹோட்டல்களின் மதுக்கூடங்கள், முன்னாள் படை வீரா் மதுவிற்பனைக் கூடம் உள்ளிட்ட அனைத்தும் ஏப். 30- ஆம் தேதி இரவு 10 மணி முதல் மே 2 -ஆம் தேதி காலை 12 மணி வரை மதுபானங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவைமீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.