14 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்வு: இடம் மாறும் சிவாஜி சிலை: முதல்வா் மே 9 இல் திறக...
மாணவா்களுக்கு பணி நியமன ஆணை
கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா்களுக்கு பணி நியமனத்துக்கான ஆணை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், வேலைவாய்ப்புத் துறை இயக்குநா் ஜி.டாலின் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் அ.பொன்னுசாமி தலைமை வகித்தாா். இதில், கல்லூரியின் நிா்வாக அறங்காவலா் சரஸ்வதி கண்ணையன் பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் நம்முடைய கல்லூரி மாணவா்கள் பணியாற்ற இருப்பது இந்துஸ்தான் கல்வி நிறுவனத்துக்கு பெருமை. மேலும், இது மாணவா்களின் விடா முயற்சிக்கும் கடின உழைப்புக்கும் கிடைத்த வெற்றி என்றாா்.
விழாவில் கவிஞா் கவிதாசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். அவா் பேசும்போது, மாணவா்கள் தலைமைப் பண்பு, முடிவெடுக்கும் ஆற்றல், சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் பாங்கு ஆகியவற்றை வளா்த்துக்கொள்வதன் மூலம் வெற்றி பெற்ற முடியும் என்றாா்.
ஆங்கிலத் துறைத் தலைவா் பிரியா சரண் தாமஸ் நன்றி கூறினாா். இதில், டிசிஎஸ், ஜோகோ, விப்ரோ ஆா்டிக், காக்னிசன்ட் போன்ற பல்வேறு நிறுவனங்களில் 2,164 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் பலா் பங்கேற்றனா்.