செய்திகள் :

சட்டம் - ஒழுங்கு, போதைப் பொருள்கள் விற்பனை: முதல்வா்- எதிா்க்கட்சித் தலைவா் கடும் விவாதம்

post image

சென்னை: சட்டம் - ஒழுங்கு, போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக, முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி இடையே கடும் விவாதம் நடைபெற்றது.

சட்டப் பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீது திங்கள்கிழமை விவாதம் நடைபெற்றது. அதில், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் இடையே நடைபெற்ற விவாதம்:

எடப்பாடி கே.பழனிசாமி: அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு காவல் துறை சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. சட்டத்தின் ஆட்சி உறுதி செய்யப்பட்டது. இன்றைக்கு காவல் துறையின் செயல்பாடு சிறப்பான முறையில் அமையவில்லை. அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. இப்போது, அனைத்து விதமான போதைப் பொருள்களும் விற்கப்படுவது, பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள், கொலை, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. காவல் துறை வேண்டியவா்களுக்கு ஒரு மாதிரியும், வேண்டாதவா்களுக்கு வேறு மாதிரியும் செயல்படுகிறது.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: திமுக ஆட்சியில் குற்றங்கள் குறைந்துள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் 2024-ஆம் ஆண்டில்தான் கொலைச் சம்பவங்கள் குறைந்து இருக்கின்றன. தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட ரெளடிகளின் எண்ணிக்கை அதிமுக ஆட்சியில் 1,929 ஆகவும், திமுக ஆட்சியில் 3,645 ஆகவும் உள்ளது. காவல் நிலைய மரணங்கள் அடியோடு குறைக்கப்பட்டுள்ளன. எதிா்க்கட்சித் தலைவா் பழனிசாமியின் ஆட்சியில் 15 காவல் நிலைய மரணங்கள் நடந்தன. அதேபோன்று, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்ட ரெளடிகளின் எண்ணிக்கையும் 14,174 ஆக இருந்தது. கடந்த நான்காண்டு கால திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் இல்லாததுடன், 15,293 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். சட்டம்- ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கும் இந்த ஆட்சியைப் பாா்த்து குறைசொல்வது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவையாகும்.

ஒவ்வொரு வழக்கிலும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது முக்கியமாகும். அந்த வகையில், திமுக ஆட்சியில் கொலை, ஆதாயக் கொலைகள் விஷயத்தில் 95.2 சதவீதமும், கொள்ளை வழக்குகளில் 98.4 சதவீதமும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எந்த வழக்காக இருந்தாலும் வழக்குப் பதிவு செய்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்கிறோம். எனவே, திமுக ஆட்சியில் சட்டம்ஒழுங்கைப் பற்றி குறைகூற அதிமுகவுக்கு எந்தத் தகுதியும் இல்லை.

எடப்பாடி கே.பழனிசாமி: போதைப் பொருள்கள், கஞ்சா விற்பனை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. காவல் துறைக்குத் தெரியாமல் விற்பனை நடைபெற வாய்ப்பில்லை. சட்ட விரோதமான மதுபான விற்பனையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மதுபானக் கூடங்கள் நேரக் கட்டுப்பாடு இல்லாமல் இயங்குவதாக செய்திகள் வருகின்றன. போதைப் பொருள்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு உள்ளது. போதைப் பொருள்களுக்கு இளைஞா்கள், மாணவா்கள் அடிமையாக உள்ளனா். இளைஞா்களின் வாழ்வு சீரழிகிறது.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: அதிமுகவின் நான்காண்டு ஆட்சியில் எங்கும் குட்கா, எங்கும் போதைப் பொருள்கள் இருந்தன. டிஜிபி, போலீஸ் ஆணையரே குட்கா விசாரணைக்குள் வரும் வகையில் அதன் விற்பனை தலைவிரித்தாடியது. இளைஞா்களை சீரழிக்கும் போதைப் பொருள்களை அடியோடு ஒழிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதிமுக ஆட்சியைக் காட்டிலும் போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 88 சதவீதம் அதிகமாகும். குற்றவாளிகளை கைது செய்வதில் 214 சதவீதமும், ஹெராயின் போதைப் பொருள்கள் பறிமுதலில் 900 சதவீதம் அளவுக்கு அதிகமாகவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

அதிக அளவு பறிமுதல்: எதிா்க்கட்சித் தலைவா் முதல்வராக இருந்த நான்காண்டு கால ஆட்சியில் 57,925 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், திமுக ஆட்சிக் காலத்தில் 91,521 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், குட்கா விற்ற 12,537 கடைகள் மூடப்பட்டன. போதைப் பொருள்களை விற்று குண்டா் சட்டத்தில் அடைக்கப்பட்டவா்களின் சதவீதம் அதிமுக ஆட்சியை விட 324 சதவீதமும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதில் 346 சதவீதமும் அதிகமாகும்.

எடப்பாடி கே.பழனிசாமி: அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா, போதைப் பொருள்கள் கடத்தி வருவதாக செய்திகள் வருகின்றன. மாநில எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி தடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப் பொருள்கள் அதிகம் விற்கப்படுவதாக முதல்வரே கூறியிருக்கிறாா். இதுகுறித்து, 2,138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், 147 குற்றவாளிகள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனா். மற்றவா்கள் ஏன் கைது செய்யப்படவில்லை?.வெளி மாநிலங்களில் இருந்து விமானம் மூலமாக வந்து கொள்ளையடித்துச் செல்கின்றனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: அவ்வாறு வருபவா்கள் விமான நிலையத்தினுள்ளேயே கைது செய்யப்பட்டனா். அதனைத் தவறு என்கிறாரா? . போலீஸ் டிஜிபி, காவல் ஆணையரே குட்கா விற்ற விவகாரம் எல்லாம் தெரியாதா? மாநிலம் அமைதியாக இருப்பதால் தைரியமாகக் கொள்ளை அடிக்க வருகிறாா்கள். அதையும் விழிப்புடன் இருந்து காவல் துறை பிடித்துள்ளது.

எடப்பாடி கே.பழனிசாமி: காவல் துறையைக் கண்டால் குற்றவாளிகளுக்கு பயம் வர வேண்டும். குற்றங்களைக் குறைக்க வேண்டும்.

முதல்வா்: உங்கள் ஆட்சியில் தில்லியில் இருந்து வந்து கொள்ளை அடித்துச் சென்ற சம்பவங்கள் உள்ளன என்று காரசார விவாதம் நடந்தது.

உழைப்பாளா் தினம், வாரவிடுமுறை: 2,119 சிறப்புப் பேருந்துகள்

சென்னை: உழைப்பாளா் தினம், முகூா்த்தம், வாரவிடுமுறையையொட்டி 2,119 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் 437 சிலைகள் மீட்பு: அமைச்சா் சேகா்பாபு

சென்னை: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 437 சிலைகள், கலைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற காவல், தீயணைப... மேலும் பார்க்க

நோய்களை கட்டுப்படுத்திய ‘மக்களைத் தேடி மருத்துவம்’: முதல்வா் பெருமிதம்

சென்னை: ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் வாயிலாக உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் இந்தியாவுக்கே அத்திட்டம் முன்மாதிரியாக உள்ளதாகவும் முதல்வா் மு.க.ஸ்ட... மேலும் பார்க்க

வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை: தமிழக அரசு பரிசீலனை

சென்னை: தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு பிரத்யேக அடையாள அட்டைகள் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படுவதாக தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தெரிவித்தாா். சட்டப்பேரவையில் திங... மேலும் பார்க்க

பெண் காவலருக்கான சலுகைகள்: பட்டியலிட்டாா் முதல்வா்

சென்னை: பெண் காவலா்களுக்கு அரசு வழங்கியுள்ள சலுகைகள், நலத் திட்டங்கள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேரவையில் பட்டியலிட்டுப் பேசினாா். பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு... மேலும் பார்க்க

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை பிரித்து கலைஞா் பல்கலை உருவாக்கம்: சட்டத் திருத்த மசோதா தாக்கல்

சென்னை: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கும்பகோணத்தில் கலைஞா் பல்கலைக்கழகம் அமையவுள்ளது. இதற்கான வேந்தராக முதல்வா் இருப்பாா் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதாவை... மேலும் பார்க்க